இந்தியா

இளம் வாக்காளர்களைக் கவர மார்க்சிஸ்ட் தேர்தல் வாக்குறுதி: மேற்கு வங்க தேர்தல்

செய்திப்பிரிவு

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினரும், கட்சியின் மூத்த தலைவருமான சமிக் லஹிரி நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைத்து அதிக அளவு வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் அறிவிக்க இருக்கிறோம். இந்தத் தேர்தலில் ஏராளமான புதிய வாக்காளர்கள் பட்டியலில் இணைந்துள்ளனர். அவர்களைக் குறிவைத்தே எங்களது தேர்தல் அறிக்கை இருக்கும்.

          

கடந்த 15 ஆண்டு காலமாக திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் மாநிலம் பின்னோக்கிச் சென்றுவிட்டது. வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடி வருகிறது. மாநிலத்தில் வேலைவாய்ப்பே இல்லை. பணித்திறன் மிக்க இளைஞர்கள் மாநிலத்தில் இருந்தும் அவர் களுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. தேர்தல் அறிக்கையில், மாற்று வேலைவாய்ப்புக் கொள்கையை அறிவிக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT