இந்தியா

மத்திய அரசின் நடவடிக்கையால் சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் அச்சுறுத்தலுக்கு முடிவு: குடியரசுத் தலைவர் முர்மு பாராட்டு

செய்திப்பிரிவு

பஸ்தர்: சத்​தீஸ்​கர் மாநிலம் பஸ்​தரில், நடை​பெறும் 3 நாள் பழங்​குடி​யினர் கலாச்​சார விழா​வில் குடியரசுத் தலை​வர் திர​வுபதி முர்மு நேற்று பங்​கேற்​றார். அப்​போது அவர் பேசி​ய​தாவது:

இயற்கை எழில் மற்​றும் வளமான கலாச்​சா​ரத்​துடன் கூடிய பஸ்​தர் பகு​தி, மக்​களை எப்​போதும் கவர்​கிறது. ஆனால், இப்​பகுதி பல ஆண்டு கால​மாக மாவோ​யிஸ்ட்​கள் அச்​சுறுத்​தலில் சிக்​கி​யிருந்​தது. இதனால் இங்​குள்ள இளைஞர்​கள், பழங்​குடி​யினருக்கு மிகுந்த பாதிப்பு ஏற்​பட்​டது.

          

தற்​போது மாவோ​யிஸ்ட்​கள் வன்​முறையை கைவிட்டு அமைதிப் பாதைக்கு திரும்பி வரு​கின்​றனர். மாவோ​யிஸ்ட்​களுக்கு எதி​ராக மத்​திய அரசு உறு​தி​யான நடவடிக்கை எடுத்​த​தால், இங்கு அச்​சுறுத்​தல் முடிவுக்கு வந்​துள்​ளது.

மாவோ​யிஸ்ட்​கள் அதிக எண்​ணிக்​கை​யில் சரணடைந்​துள்​ளனர். அமைதி வழிக்கு திரும்​பும் மாவோ​யிஸ்ட்​களுக்கு கவுர​வ​மான வாழ்க்​கையை மத்​திய அரசு உறுதி செய்​கிறது. மத்​திய, மாநில அரசுகளின் முயற்​சிகள், மக்​களின் ஒத்​துழைப்பு ஆகிய​வற்​றால் பஸ்​தரில் வளர்ச்​சிக்​கான புதிய விடியல் உதய​மாகி​யுள்​ளது. இவ்​வாறு முர்​மு கூறி​னார்​.

SCROLL FOR NEXT