இந்தியா

மாவோயிஸ்ட் வேட்டையில் 6 குண்டு வெடித்து 11 வீரர்கள் காயம்

செய்திப்பிரிவு

பிஜப்பூர்: சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் ஒழிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லை அருகே உள்ள பிஜப்பூர் மாவட்டம் மேற்கு உசர் பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மாவோயிஸ்ட் ஒழிப்பு பணிக்காக உருவாக்கப்பட்ட கூட்டு பாதுகாப்பு படையினர் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கரேகுட்டா மலைப் பகுதியில் தேடுதல் வேட்டை மேற்கொண்டபோது, மாவோயிஸ்ட்கள் புதைத்து வைத்திருந்த 6 குண்டுகள் வெடித்தன. இதில் காயமடைந்த 11 வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

          
SCROLL FOR NEXT