இந்தியா

முன்னாள் பிரதமர் மன்மோகன் முதல் நினைவு தினம் அனுசரிப்பு: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி

செய்திப்பிரிவு

​முன்​னாள் பிரதமர் மன்​மோகன் சிங்​கின் முதல் நினைவு தினம் நேற்று கடைபிடிக்​கப்​பட்​டதையொட்டி காங்​கிரஸ் தலை​வர்​கள் அவருக்கு அஞ்​சலி செலுத்​தினர்.

காங்​கிரஸ் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே கூறிய​தாவது: பணிவு, நேர்​மை, புத்​தி​கூர்​மைக்கு சிறந்த எடுத்​துக்​காட்​டாக விளங்​கிய​வர் மன்​மோகன் சிங். நாட்​டின் பொருளா​தா​ரப் பாதையை மறு​வடிவ​மைத்து பொருளா​தார சீர்​திருத்​தங்​கள் மூலம் லட்​சக்​கணக்​கான மக்​களுக்கு வேலை​வாய்ப்​பு​களை விரிவுபடுத்​தி​ய​வர். கோடிக்​கணக்​கான மக்​களை வறுமையி​லிருந்து மீட்​ட​வர்.

மன்​மோகன் சிங்​கின் தொலைநோக்கு பார்​வை​யின் கீ்ழ் நாங்​கள் ஒரு வலிமை​யான இந்​தி​யாவை உரு​வாக்​கினோம். இவ்​வாறு கார்கே தெரி​வித்​துள்​ளார்.

ராகுல் காந்தி கூறுகை​யில், “தொலைநோக்கு பார்வை கொண்ட அவர் இந்​தி​யாவை பொருளா​தார ரீதி​யாக வலுப்​படுத்​தி​னார். பின்​தங்​கிய மற்​றும் ஏழை மக்​களுக்​காக அவர் மேற்​கொண்ட வரலாற்​றுச் சிறப்​புமிக்க முயற்​சிகளும், துணிச்​சலான முடிவு​களும் உலக அரங்​கில் இந்​தி​யா​வுக்கு புதிய அடை​யாளத்தை பெற்​றுத் தந்​தது. அவரது பணிவு, கடின உழைப்​பு, நேர்மை எப்​போதும் நம் அனை​வருக்​கும் உத்​வேக​மாக இருக்​கும்​’’ என்​று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT