மணிஷ் திவாரி
புதுடெல்லி: கடந்த 2017 முதல் 2019 வரை காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பதவி வகித்தார். அவரது தலைமைக்கு எதிராக மணிஷ் திவாரி உள்ளிட்ட 23 மூத்த தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர். காங்கிரஸில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று கடந்த 2020-ம் ஆண்டில் சோனியா காந்திக்கு கடிதம் எழுதினர்.
இந்த சூழலில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான காங்கிரஸ் உயர்நிலைக் குழு நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்டது. இதில் மணிஷ் திவாரியின் பெயர் இடம்பெறவில்லை. அவரை காங்கிரஸ் தலைமை புறக்கணித்திருப்பதாகக் கூறப்படுகிறது.