உள்படம்: பியூஷ் தம்​னோட்​டியா

 
இந்தியா

ம.பி.யில் காதலி கழுத்தை நெரித்துக் கொன்று ஆவியுடன் பேச முயன்ற காதலன்

செய்திப்பிரிவு

இந்தூர்: மத்​திய பிரதேச மாநிலம் இந்​தூரின் துவாரகபுரி பகு​தி​யிலுள்ள ஒரு குடி​யிருப்பில் துர்​நாற்​றம் வீசுவ​தாக கடந்த ஜன. 13-ம் தேதி போலீ​ஸாருக்கு புகார் வந்​தது.

போலீ​ஸார் வந்து கதவை உடைத்​துப் பார்த்​த​போது அங்கு 24 வயது மதிக்​கத்​தக்க பெண்​ணின் சடலம் கண்​டெடுக்​கப்​பட்​டது. போலீ​ஸார் விசா​ரணை நடத்​தி​ய​போது அந்த வீடு துவாரகபுரியைச் சேர்ந்த எம்​பிஏ மாணவர் பியூஷ் தம்​னோட்​டியா என்​பவருக்​குச் சொந்​த​மானது என்​பது தெரிய​வந்​தது.

          

தலைமறை​வாக இருந்த பியூஷை போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். இதுகுறித்து இந்​தூர் போலீஸ் துணை கமிஷனர் கிருஷ்ணாலால் சாந்​தினி கூறிய​தாவது: பெண்​ணின் சடலம் கண்​டெடுக்​கப்​பட்ட வீட்​டின் அருகே கிடைத்த சிசிடிவி கேமரா பதிவு​களின் மூலம் அப்பெண்ணை பியூஷ் தனது வீட்டுக்கு அழைத்து வந்தது தெரிய​வந்​தது.

அவரது தொலைபேசி எண்ணை வைத்து அவரை மகா​ராஷ்டி​ரா​வில் கைது செய்​தோம். அவரை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்தி 3 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசா​ரித்​தோம். கடந்த ஜனவரி மாதம், அந்தப் பெண்ணை வீட்​டுக்கு அழைத்து வந்து பியூஷ் பேசிக் கொண்​டிருந்​த​போது அவர்​களுக்​குள் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டுள்​ளது.

இதையடுத்​து, பியூஷ், பெண்​ணின் கழுத்தை கயிற்​றால் நெரித்து கொலை செய்​துள்​ளார். பின்​னர் அங்​கிருந்து மும்​பைக்கு அரு​கிலுள்ள பன்​வலுக்​குச் சென்​றுள்​ளார். அங்கு ஒரு ஓட்​டலில் இரவு தங்கி மாந்​தீரிக சடங்​கு​களை செய்து அந்​தப் பெண்​ணின் ஆவியைத் திரும்ப அழைத்து பேச முயற்​சித்​துள்​ளார். அந்​தப் பெண்​ணின் செல்​போனை​யும் உடைத்து அழித்​து​விட்​டார்.

அந்​தப் பெண் மற்ற ஆண்​களு​டன் பேசி​ய​தால் எழுந்த சந்​தேகம் காரண​மாக இந்த கொலை நடந்​துள்​ள​தாகத் தெரி​கிறது. கொலை நடந்த தினத்​தில் உடலுறவுக்கு அந்தப் பெண்ணை அழைத்​துள்​ளார்.

ஆனால், அவர் மறுக்​கவே, உனக்கு திடீர் பரிசு தரு​கிறேன் என்று பெண்​ணின் கண்ணை கட்​டி​விட்டு பின்​னர் கொலை செய்​துள்​ளார். பின்​னர் உயிரற்ற சடலத்​துடன் அவர் உடலுறவு கொண்​ட​தாகத் தெரி​கிறது. இவ்​வாறு கிருஷ்ணாலால்​ சாந்​தினி தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT