இந்தியா

குஜராத்தில் ரூ.10 கடன் கொடுக்க மறுத்தவர் கொலை

செய்திப்பிரிவு

காந்திநகர்: குஜ​ராத்​தின் நர்​மதா மாவட்​டம், பதர்வா கிராமத்​தில் ராஜேஷ்​பாய் தன்​ஜி​பாய் தத்வி என்ற மாற்​றுத் திற​னாளி மளி​கைப் பொருட்​களை வாங்​கிக் கொண்டு பேருந்து நிறுத்​தத்​தில் இருந்து வீடு திரும்​பிக் கொண்​டிருந்​தார். அப்​போது தர்​மேந்​திர​பாய் என்​கிற தாமோ (33) என்​பவர் அவரை வழிமறித்​துள்​னர்.

ராஜேஷ்​பா​யிடம் தனது சொந்த செல​வுக்​காக ரூ.10 கடன் தரு​மாறு தர்​மேந்​திர​பாய் கேட்​டுள்​ளார். ஆனால் அவர் தர மறுத்​த​தால் ஆத்​திரமடைந்த தர்​மேந்​திர​பாய், ராஜேஷ்​பாயை கீழே தள்ளி கழுத்தை நெரித்​த​தில் ராஜேஷ் பாய் உயி​ரிழந்​தார். இதையடுத்து தர்​மேந்​திர​பாய் கைது செய்யப்பட்டார்.

          
SCROLL FOR NEXT