இந்தியா

சாலைகளில் தொழுகை நடத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து வழக்கு போடுங்கள்: மம்தா உத்தரவு

ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மேற்கு வங்க முன்​னாள் முதல்​வரும் திரிண​மூல் காங்​கிரஸ் (டிஎம்​சி) தலை​வரு​மான மம்தா பானர்ஜி நேற்று முன்​தினம் தனது இல்​லத்​தில் ஒரு ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தி​னார். இதில் கொல்​கத்தா மாநக​ராட்​சி​யின் டிஎம்சி கவுன்​சிலர்​கள் கலந்து கொண்​டனர். இந்த ஆண்டு இறு​தி​யில் கொல்​கத்தா மாநக​ராட்​சிக்கு தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில் கட்​சி​யின் தயார் நிலையை ஆய்வு செய்ய மம்தா இந்​தக் கூட்​டத்தை நடத்​தி​னார்.

இந்​தக் கூட்​டத்​தில், சாலைகளில் தொழுகை நடத்த முஸ்​லிம்​களுக்கு மாநில அரசு தடை விதித்​துள்​ளது குறித்​தும் விவா​திக்​கப்​பட்​டது. அப்​போது மேட்​டி​யாபுரூஜ் பகுதி டிஎம்சி கவுன்​சிலரை, இப்​பிரச்​சினை தொடர்​பாக நீதி​மன்​றத்தை அணுகு​மாறு மம்தா அறி​வுறுத்​தி​யுள்​ளார். எனவே அந்த கவுன்​சிலர் இந்த விவ​காரம் குறித்து விரை​வில் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​வார் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இதற்​கிடை​யில், முதல்​வர் சுவேந்து அதி​காரி அரசின் கடுமை​யான நடவடிக்​கைகள் தொடர்ந்​த​தால் கடந்த வெள்​ளிக்​கிழமை கொல்​கத்​தா​வின் ராஜாபஜார், தபாசி​யா, பார்க் சர்க்​கஸ், தில்​ஜலா ஆகிய பகு​தி​களில் சாலைகளை மறித்து தொழுகை நடத்​தப்​பட​வில்​லை.

மசூ​தி​களில் இரண்டு கட்​டங்​களாக இரு​வேறு நேரங்​களில் தொழுகைக்கு ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டிருந்​தன. இதனால் முஸ்​லிம்​கள் மசூ​தி​களுக்கு உள்​ளேயே தங்​கள் தொழுகையை முடித்​துக்​கொண்​டனர்.

கொல்​கத்தா மாநக​ராட்​சி​யில் மொத்​தம் 144 வார்​டு​கள் உள்​ளன. மாமன்​றத்​தில் டிஎம்சி சார்​பில் 136 கவுன்​சிலர்​கள் உள்​ளனர். கடந்த மாதம் நடை​பெற்ற சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் பாஜகவிடம் டிஎம்சி படு​தோல்​வியை சந்​தித்​தது.

இச்​சூழலில், வரும் மாநக​ராட்​சித் தேர்​தலை முன்​னிட்​டு, கட்​சித் தொண்​டர்​கள் மற்​றும் நிர்​வாகிகளுக்கு புத்​துணர்ச்​சி​யூட்ட அக்​கட்சி தீவிர முயற்சி மேற்​கொண்டு வரு​கிறது.

மம்தா முதல்​வ​ராக இருந்​த​போது பக்​ரீத் பண்​டிகைக்கு 2 நாள் அரசு விடு​முறை அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. தற்​போது ஒரு நாளாக மாற்​றப்பட்டுள்ளது. வரும் மே 28-ல்​ பக்​ரீத்​ பண்​டிகை கொண்​டாடப்​பட உள்​ளது.

SCROLL FOR NEXT