இந்தியா

“காங்கிரசுடன் காதல்... மோடியுடன் திருமணம்!” - தேவ கவுடா பற்றி கார்கே கிண்டல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மாநிலங்​களவை​யில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா உட்பட 37 எம்​.பி.க்​களின் பதவிக்​காலம் முடிவடைய உள்ளது. அவர்களை வாழ்த்தி வழியனுப்​பும் வகை​யில் பிரதமர் மோடி, எதிர்க்​கட்சி தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே ஆகியோர் நேற்று மாநிலங்​களவை​யில் பேசினர்.

தேவக​வுடா குறித்து மாநிலங்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே பேசுகை​யில், ”தேவக​வு​டாவை எனக்கு 54 ஆண்டு​களுக்கு மேலாக தெரி​யும். அவருடன் நான் நீண்ட காலம் இணைந்து பணி​யாற்​றி​யுள்​ளேன். பிறகு, அவருக்கு என்ன ஆனது என்று தெரிய​வில்​லை.... ”அவர் நேசித்​தது எங்​களை, ஆனால் திருமணம் செய்​தது மோடியை” என கிண்​டலாக குறிப்​பிட்​டார்.

          

கார்​கே​வின் பேச்சை கேட்டு பிரதமர் மோடி மற்​றும் எம்​.பி.க்​கள் சிரித்​தனர். அரசி​யலில் ஈடு​படு​பவர்​கள் நாட்​டுக்கு சேவை செய்ய வேண்​டும் என்ற உறு​தி​யுடன் இருப்​ப​தால், அவர்​களுக்கு ஓய்வே இல்லை எனவும் கார்கே கூறி​னார்.

பிரதமர் மோடி பேசுகை​யில், ”சமீப​கால​மாக அவை​யில் நகைச்​சுவை, கிண்​டல் எல்​லாம் குறைந்து விட்​டது. அவைக்கு புதி​தாக தேர்வு செய்​யப்​பட்​டுள்ள எம்​.பி.க்​கள், தேவக​வு​டா, கார்கே மற்​றும் சரத் பவார் போன்ற மூத்த உறுப்​பினர்​களிடம் இருந்து கற்​றுக்​ கொள்​ள வேண்​டும்​” என்​றார்​.

SCROLL FOR NEXT