இந்தியா

மகாராஷ்டிர ‘டெட்' தேர்வு ஒத்திவைப்பு

செய்திப்பிரிவு

மும்பை: மகா​ராஷ்டி​ரா​வில் 2026-ம் ஆண்​டுக்​கான ஆரியர் தகுதித் தேர்வு இன்று (ஜூன் 28) நடை​பெற இருந்​தது. இந்​நிலையில், வினாத்தாள் தொடர்பான ஆவணங்களை பிவாண்டி போலீ​ஸார் கைப்​பற்றினர்.

இதையடுத்து இன்று நடை​பெற இருந்த 'டெட்' தேர்வை ஒத்திவைக்க தேர்​வாணை​யம் முடிவு செய்​தது. இதுதொடர்​பான அறி​விப்பை மகா​ராஷ்டிர மாநில தேர்வு கவுன்​சில், தேர்​வுக்கு 24 மணி நேரத்​துக்கு முன்பு நேற்று வெளி​யிட்​டது. ‘‘வி​னாத்​தாள் கசிந்​திருக்க வாய்ப்​புள்​ள​தாகக் கிடைத்த தகவலின் அடிப்​படை​யில் இந்த முடிவு எடுக்​கப்​பட்​டுள்​ளது. தேர்​வுக்​கான புதிய தேதி பின்னர் அறிவிக்​கப்​படும்” என்று அந்த அறி​விப்​பில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT