இந்தியா

உத்தராகண்​டில் மதரஸாக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை

செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்ட் மாநில சிறு​பான்​மை​யினர் கல்வி ஆணையத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட மதரஸாக்​களுக்கு வெள்​ளிக்​கிழமைக்​குப் பதிலாக ஞாயிற்​றுக்​கிழமையே வார விடுமுறையாக இருக்​கும் என்று மாநில முதல்​வர் புஷ்கர் சிங் தாமி தெரி​வித்தார்.

உத்​த​ராகண்ட் மாநில தலைநகர் டேராடூனில் நேற்று நடை​பெற்ற காவல் துறை நினைவு தின நிகழ்ச்​சி​யில் முதல்​வர் புஷ்கர் சிங் தாமி பங்​கேற்​றார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, “உத்​த​ராகண்ட் மாநில சிறு​பான்​மை​யினர் கல்வி ஆணை​யத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்ட மதரஸாக்​களுக்கு வெள்​ளிக்​கிழமைக்​குப் பதிலாக ஞாயிற்​றுக்​கிழமையே வார விடு​முறை​யாக இருக்​கும்.

கல்​வித் துறை​யால் அங்​கீகரிக்​கப்​பட்ட பள்​ளி​களாக மதரஸாக்கள் தற்​போது செயல்​படு​வ​தால், கல்​வித் துறை​யின் விதி​முறை​கள் அவற்​றுக்​கும் சமமாகப் பொருந்​தும். அனைத்து கல்வி நிறு​வனங்​களும் ஒரே திசை​யில் செயல்பட வேண்​டும்” என்றார். நாட்​டிலேயே முதன்​முதலில் பொது சிவில் சட்​டத்தை அமல்​படுத்​திய மாநில​மான உத்​த​ராகண்ட், உரிய அனு​ம​தி​யின்றி செயல்​படும் மதரஸாக்​கள் மீதும் நடவடிக்கை எடுத்து வரு​கிறது.

இதுகுறித்​து, சிறு​பான்​மை​யினர் நலத்துறைச் செயலர் பராக் மதுகர் தகேட் கூறும்​போது, “கடந்த ஆண்டு மேற்​கொள்​ளப்​பட்ட நடவடிக்​கை​யின்​போது, பதிவு செய்​யப்​ப​டா​மல் செயல்​பட்ட 250 மதரஸாக்​களுக்கு அதி​காரி​கள் சீல் வைத்​தனர். அவை முறையான பதி​வின்றி செயல்​பட்​டதுடன், பிற மாநிலங்​களைச் சேர்ந்த குழந்​தைகளை​யும் சேர்த்​துக் கல்வி வழங்கி வந்​தது விசாரணையில்​ தெரியவந்தது’’ என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT