இந்தியா

“இண்டியா கூட்டணி பேரணியை விளம்பரப்படுத்திய பாஜகவுக்கு நன்றி” - ராகுல் காந்தி கிண்டல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: நவம்​பர் 1-ம் தேதி டெல்லி ராம்​லீலா மைதானத்​தில் இண்டியா கூட்டணி சார்​பாக பிரம்​மாண்​டப் பேரணி நடைபெறவுள்​ளது.

தேர்​தல் முறைகேடுகள் மற்​றும் வாக்​குத் திருட்​டுக்கு எதிராக இந்த எதிர்ப்​புப் பேரணி நடத்​தப்​படு​கிறது. இந்​தச் சூழலில், பேரணியை மிக தீவிர​மாக விமர்​சித்து, அதன் செய்தி நாடெங்​கும் பரவ உதவிய பாஜக​வுக்கும் அதன் கூட்​ட​ணிக் கட்​சிகளுக்​கும் மக்களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி கிண்​டலாக ‘மனமார்ந்த நன்​றிகளை’ தெரி​வித்​துள்​ளார்.

இது​குறித்து அவர் மேலும் கூறுகை​யில், “மக்​களின் வாக்​கு​கள் திருடப்​படு​கின்​றன. வாக்​காளர் பட்​டியலி​லிருந்து பெயர்​கள் நீக்கப்​படு​கின்​றன.

தட்​டிக் கேட்​பவர்​கள் மீது போலீஸ் தடியடி துப்பாக்​கிச் சூடு நடத்​தப்​படு​கிறது. இதை நாங்​கள் அமைதி​யாகப் பார்த்​துக்​கொண்டு இருக்க மாட்​டோம். நாடே இதற்​கான பதிலைச் சொல்​லும்.

வாக்​கைக் காப்​போம், தேசத்​தைக் காப்​போம் என்ற முழக்கத்துடன் நவம்​பர் 1 அன்று நடை​பெற உள்ள ‘டெல்லி சலோ’ பேரணி​யில் மாணவர்​கள், விவசாயிகள், தொழிலா​ளர்​கள், இளைஞர்​கள் என அனைவரும் இணைய வேண்​டும் என அழைப்பு விடுக்​கிறேன்.

இந்த பேரணி​யைப் பற்​றித் தொடர்ந்து பேசி, இதை நாட்டு மக்களிடம் கொண்டு சேர்த்த பாஜக​வுக்கு மிக்க நன்றி. அடுத்த 7 நாட்​களுக்​கும் இதே உற்​சாகத்​தைத் தக்​கவைத்​துக் கொள்ளுங்கள்” என்று நையாண்​டி​யாக தெரி​வித்​துள்​ளார்.

இண்டியா கூட்​ட​ணி​யின் பேரணிக்கு முன்​னதாக, அக்​டோபர் 30 அன்று டெல்லி அசோக் ஹோட்​டலில் கூட்​ட​ணித் தலை​வர்​கள் மற்றும் எம்​பிக்​கள் பங்​கேற்​கும் ‘மாதிரி நாடாளு​மன்​றம்’ நடைபெறும். அதில் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாருக்கு எதிராக விசா​ரணை நடத்​தப்​பட்டு கண்​டனத் தீர்மானம் நிறைவேற்​றப்​பட உள்​ளது.

டெல்லி ராம்​லீலா மைதானத்தை நோக்கி காங்​கிரஸ் மற்​றும் கூட்ட​ணிக் கட்​சிகள் நடத்​தும் இந்த மாபெரும் பேரணி, ஜனநாயகத்​தைப் பாது​காப்​ப​தற்​கான முக்​கிய மைல்​கல்​லாக இருக்​கும் என காங்​கிரஸ் பொதுச்செய​லா​ளர் கே.சி. வேணு கோபால் தெரிவித்துள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT