இந்தியா

மக்களவைத் தொகுதி எண்ணிக்கையை அதிகரிக்கக்கூடாது: இண்டியா கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்​களவைத் தொகுதி​களை அதி​கரிக்​கக்​கூடாது என்று இண்​டியா கூட்​டணி வலியுறுத்தி உள்ளது.

இண்​டியா கூட்​ட​ணி​யின் உயர்​நிலை ஆலோ​சனைக் கூட்​டம் டெல்​லி​யில் நேற்று நடை​பெற்​றது. காங்​கிரஸ் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே வீட்​டில் நடந்த கூட்​டத்​தில் அந்த கட்​சி​யின் மூத்த தலை​வர்​கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, ஜெய்​ராம் ரமேஷ், வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்​டனர். சமாஜ்வாதி எம்பி ராம்ஜிலால் சுமன், திரிணமூல் காங்​கிரஸ் பொதுச்​செய​லா​ளர் அபிஷேக் பானர்ஜி, ராஷ்டி​ரிய ஜனதா தள மூத்த தலை​வர் மனோஜ் ஜா, அபய் குமார் சிங், இந்​திய கம்​யூனிஸ்ட் மூத்த தலை​வர் சந்​தோஷ் குமார், மார்க்​சிஸ்ட் மூத்த தலை​வர் ரஹீம் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். தொகுதி மறு​வரையறை மசோதா தொடர்​பாக சுமார் 3 மணி நேரத்​துக்​கும் மேலாக முக்​கிய ஆலோ​சனை நடத்​தப்​பட்​டது.

இதன்​ பிறகு காங்​கிரஸ் தலை​வர் மல்​லிகார்​ஜுன கார்கே நிருபர்களிடம் கூறிய​தாவது:

இண்​டியா கூட்​டணி சார்​பில் 3 கோரிக்​கைகளை வலியுறுத்து​கிறோம். மக்​களவைத் தொகுதி​களின் எண்​ணிக்​கையை அதி​கரிக்​கக்​கூடாது. தற்​போதைய 543 தொகுதி​கள் வரம்​பிலேயே மகளிருக்​கான 33 சதவீத இடஒதுக்​கீட்டை அமல் செய்ய வேண்​டும். அடுத்த 25 ஆண்​டுகளுக்கு மக்​களவைத் தொகுதி​களில் எவ்​வித மாற்​றமும் செய்​யக்​கூடாது.

பிரதமர் மோடி​யின் கைப்​பாவை​யாக தேர்​தல் ஆணை​யம் செயல்​பட்டு வரு​கிறது. தற்​போதைய தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்குமாரின் தலை​மையில் தொகுதி மறு​வரையறை நடை​பெறும். எனவே எஸ்ஐஆர் வாக்கு திருட்டு போன்று இதிலும் சதி வேலைகள் அரங்​கேறும். நாடாளு​மன்​றத்​தில் கொண்டு வரப்​படும் தொகுதி மறு​வரையறை மசோதாவை நாங்​கள் தீவிர​மாக எதிர்ப்​போம். இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

இண்​டியா கூட்​ட​ணி​யில் இடம்​பெற்​றிருக்​கும் சரத் பவாரின் தேசி​ய​வாத காங்​கிரஸ் இக்கூட்​டத்​தில் பங்​கேற்​க​வில்லை. இண்​டியா கூட்​ட​ணி​யில் இடம்​பெறாத திமுக, ஆம் ஆத்மி, பிஜு ஜனதா தளம் கட்​சிகளுக்கு அழைப்பு விடுக்​கப்​பட்டு இருந்​தது. அந்த கட்​சிகளும் கூட்​டத்தை புறக்​கணித்​தன.

ஜனநாயக படுகொலை

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 850 ஆக அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இது ஜனநாயக படுகொலை. பிரதமர் நரேந்திரமோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத்தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோருக்கு, அவர்கள் விரும்பியபடி இந்தியாவின் தொகுதி வரைபடத்தை மறுவடிவமைக்க ஒரு வெற்றுத் தாளைக் கொடுப்பதே இதன் நோக்கம்.

இதன் மூலம் பாஜக, எதிர்க்கட்சி வாக்காளர்களை ஒரு சில தொகுதிகளில் குவித்து, மற்ற வர்களைப் பல தொகுதிகளில் பிரித்து, எதிர்க்கட்சிகளின் தேர்தல் செல்வாக்கைக் குறைத்துவிடும். முன்மொழியப்பட்ட மாற்றங்கள் மூலம் பாஜக நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கித் தள்ளுகிறது. மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களைக் கொண்டே பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT