பாஜக மூத்த தலைர் எல்.கே.அத்வானி
புதுடெல்லி: பாஜக மூத்த தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு 98 வயதாகிறது. வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மே மாதம் அனுமதிக்கப்பட்டார். சில நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார்.
இந்நிலையில், எல்.கே. அத்வானி நெஞ்சு சளி தொற்று காரணமாக டெல்லி இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். முதலில் நுரையீரல் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர், தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா அப்பல்லோ மருத்துவமனையில் அத்வானியைச் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தார்.