உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி

 
இந்தியா

2-வது திருமணம், லிவிங் டுகெதர் குற்றங்களுக்கு 7 ஆண்டு சிறை: உத்தராகண்ட் பொது சிவில் சட்டத்தில் திருத்தம்

செய்திப்பிரிவு

டேராடூன்: இந்​தி​யா​வில் முதல் மாநில​மாக உத்​த​ராகண்​டில் பொது சிவில் சட்​டம் கடந்த 2025 ஜனவரி 27 முதல் அமலுக்கு வந்​துள்​ளது. இது மதம், பாலின வேறு​பாடின்றி திரு​மணம், விவாகரத்​து, வாரிசுரிமை மற்​றும் லிவ்​-இன் உறவு​களுக்கு (திரு​மணம் செய்​து​கொள்​ளாமல் சேர்ந்து வாழ்​வது) ஒரே சட்​ட​வி​தி​களை உறுதி செய்​கிறது.

இந்​நிலை​யில் பொது சிவில் சட்​டத்​தில் திருத்​தங்​கள் செய்து அதை உத்​த​ராகண்ட் அரசு வலுப்​படுத்​தி​யுள்​ளது. இந்த திருத்​தங்​கள் தொடர்​பான அவசர சட்​டத்​துக்கு மாநில ஆளுநர் குர்​மீத் சிங் ஒப்​புதல் அளித்​ததை தொடர்ந்து புதிய விதி​கள் அமலுக்கு வந்​துள்​ளன.

          

இதன்​படி கட்​டாய​மாகவோ அல்​லது மோசடி​யாகவோ திரு​மணம் செய்​வது மற்​றும் லிவ்​-இன் உறவில் ஈடு​படு​வதற்கு கடும் தண்​டனை உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது. ஒரு​வர் தனது திரு​மணத்தை மறைத்து இன்​னொரு திரு​மணம் செய்​து​கொள்​வது அல்​லது லிவ்​-இன் உறவில் ஈடு​படு​வது இனி கடும் குற்​ற​மாக கருதப்​படும்.

இது​போல் லிவ்​-இன் உறவில் உள்ள ஒரு​வர் அதை மறைத்து மற்​றொரு லிவ்-இன் உறவில் ஈடு​படு​வதும் கடும் குற்​ற​மாகும். இந்த குற்​றங்​களுக்கு இனி 7 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை விதிக்​கப்​படும். சிறாருடன் லிவ்​-இன் உற வில் ஈடு​படும் 18 வயதுக்கு மேற்​பட்​டோருக்கு 6 மாத சிறை, ரூ.50,000 அபராதம் விதிக்​கப்​படு​ம்.

SCROLL FOR NEXT