

புதுடெல்லி: மத்திய அரசில் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க புதிய விதிமுறை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட உத்தரவில், “2011-ம் ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய தொகுப்பைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள், மத்திய அரசில் ஐஜி அல்லது அதற்கு இணையான பதவிக்கு தேர்வு செய்யப்பட வேண்டுமானால், அவர்கள் எஸ்பி அல்லது டிஐஜி நிலையில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் மத்தியப் பணி ஒதுக்கீட்டில் பணியாற்றியிருக்க வேண்டியது கட்டாயம்” என கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மூத்த அதிகாரிகள் மத்திய மட்டத்தில் போதுமான களப்பணி அனுபவத்தைப் பெற்றிருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று இந்த விவகாரம் குறித்து அறிந்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.