இந்தியா

குழந்தை பாலியல் வன்கொடுமை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை: 21 நாட்களில் விரைந்து விசாரித்து தீர்ப்பு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தின் முசாபர் நகரில் கடந்த மார்ச் மாதம், 18 மாதக் குழந்​தை​யுடன் தாய் ஒரு​வர் உறவினர் வீட்டுக்குச் சென்​றிருந்​தார். அப்​போது குழந்​தை​யின் தாய்க்கு உறவின​ரான 30 வயது நபர், குழந்​தைக்கு பிஸ்​கட் வாங்​கித் தருவதாகக் கூறி அழைத்​துச் சென்று பாலியல் வன்​கொடுமை செய்​தார்.

இதையடுத்​துக் குழந்​தை​யின் தாய் காவல் நிலை​யத்​தில் புகாரளித்​தார். போலீ​ஸார் உடனடி​யாக வழக்​குப் பதிவு செய்து அதே நாளில் என்​க​வுன்ட்​டருக்​குப் பிறகு அந்த நபரைக் கைது செய்​தனர். பின்​னர் பாலியல் கொடுமைக்​கான ஆதா​ரங்​களைத் திரட்​டித் தீவிர​மாக விசா​ரணை நடத்​தினர். சாட்​சிகளிடம் காவல் துறை​யினர் விரைந்து விசா​ரணை நடத்தி வாக்​குமூலங்​களைப் பதிவு செய்​தனர். பின்​னர் குற்​றப்​பத்​திரிக்​கை​யும் விரை​வாகத் தாக்​கல் செய்​யப்​பட்​டது.

இந்த வழக்​கில் கடந்த ஜூலை 3-ம் தேதி குற்​றச்​சாட்​டு​கள் பதிவு செய்​யப்​பட்​டு, வெறும் 21 நாட்​களுக்​குள், அதாவது ஜூலை 24-ம் தேதி போக்சோ சிறப்பு நீதிபதி மனோஜ் குமார் சித்து தலைமையிலான சிறப்பு நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்​கியது.

குற்​ற​வாளிக்கு ஆயுள் தண்​டனை விதிக்​கப்​பட்​டது. அத்​துடன், குற்ற​வாளிக்கு ரூ. 2 லட்​சம் அபராதம் விதித்து அந்​தத் தொகையை முழு​மை​யாகப் பா​திக்​கப்​பட்​ட குழந்​தைக்​கு வழங்​க நீதி​மன்​றம்​ உத்​தர​விட்​டது.

SCROLL FOR NEXT