நவ்ப்ரீத் சிங்

 
இந்தியா

போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் நவ்ப்ரீத் சிங் துருக்கியிலிருந்து நாடு கடத்தல்

வரலாற்று மைல்கல் என மத்திய அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சர்​வ​தேச போதைப்​பொருள் கடத்​தல் கும்​பல்​களுக்கு எதி​ராக இந்​தியா பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. அதன் ஒரு பகு​தி​யாக துருக்​கி​யில் பதுங்கி இருந்த போதைப்​பொருள் கடத்​தல் கும்​பலின் தலை​வன் நவ்ப்​ரீத் சிங், இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்​டுள்​ளான்.

இதுகுறித்து மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, எக்ஸ் தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “நவ்ப்​ரீத் சிங் ‘நவாப் விர்க்’ என்ற போலி பெயரில் துருக்கி குடி​யுரிமை​யைப் பெற்​றிருந்​தான்.

இந்த போலி அடை​யாளத்​தின் பின்​னணி​யில் இருந்​து, ஆப்​கானிஸ்​தானில் இருந்து ஹெரா​யின் மற்​றும் மெத்​த​பெட்​டமைன் போன்ற போதைப்​பொருட்​களை இந்​தி​யா​வுக்​குள் கடத்தி வந்​தான்.

இந்​திய உளவுத்​துறை மற்​றும் சட்ட அமலாக்க அமைப்​பு​கள் பல நாடு​களில் அவனது நகர்​வு​களை கண்​காணித்​து, போலி ஆவணங்​கள் மற்​றும் வெளி​நாட்டு குடி​யுரிமை தடைகளை உடைத்து அவனது உண்​மை​யான அடை​யாளத்தை உறு​திப்​படுத்​தின. இறு​தி​யில் அவனை கண்​டு​பிடித்​து, இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தும் நடவடிக்​கையை வெற்​றிகர​மாக நிறைவேற்​றின.

போதைப்​பொருள் கடத்​தல் மற்​றும் பிற குற்​றச்​சாட்​டு​களு​டன் தொடர்​புடைய வழக்​கு​களில் அவன் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டான். இது சர்​வ​தேச போதைப்​பொருள் கும்​பல்​களுக்கு எதி​ரான நடவடிக்​கை​யில் வரலாற்​றுச் சிறப்​புமிக்க மைல்​கல். 2029 டிசம்​பருக்​குள் இந்​தி​யா​வில் செயல்​படும் அனைத்து போதைப்​பொருள் கடத்​தல் கும்​பல்​களை​யும் முழு​மை​யாக ஒழிக்​கும் இலக்​கில் மத்​திய அரசு உறு​தி​யாக உள்​ளது” என தெரி​வித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT