இந்தியா

“கேரளாவில் இடது முன்னணி அமோக வெற்றி பெறும்” - பினராயி விஜயன் நம்பிக்கை

செய்திப்பிரிவு

கண்ணூர்: கேரள சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் இடது​சாரி ஜனநாயக முன்​னணி (எல்​டிஎப்) கடந்த முறையை விட அதிக இடங்​களைக் கைப்​பற்​றி, அமோக வெற்றி பெற்று மீண்​டும் ஆட்​சி​யைத் தக்​கவைக்​கும் என்று முதல்​வர் பின​ராயி விஜயன் நம்பிக்கை தெரி​வித்​துள்​ளார்.

கண்​ணூரில் தனது வாக்​கினை பதிவு செய்​த​பின் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: கேரள மக்​கள் கடந்த பத்து ஆண்​டு​களாக இடது​சாரி அரசின் மக்​கள் நலத்​திட்​டங்​களை​யும், வளர்ச்​சிப் பணி​களை​யும் அணுஅணு​வாகக் கவனித்து வரு​கின்​றனர். எங்​கள் மீது மக்​கள் முழு​மை​யான நம்​பிக்கை வைத்​துள்​ளனர். எதிர்க்​கட்​சிகள் பரப்​பும் பொய்ப் பிர​சா​ரங்​களோ அல்​லது மதவாத அரசி​யலோ எங்​களை வீழ்த்த முடி​யாது.

          

கேரளா​வின் வளர்ச்​சிப் பாதையைத் தொடர வேண்​டுமா அல்​லது எதிர்க்​கட்​சிகளின் பிடி​யில் சிக்கி கேரள மாநிலம் பின்​னோக்​கிச் செல்ல வேண்​டுமா என்​ப​தைத் தீர்​மானிக்​கும் முக்​கிய​மான தேர்​தல் இது.

எங்​களது அரசு செயல்​படுத்​திய லைஃப் மிஷன் வீட்டு வசதித் திட்​டம், சுகா​தா​ரத் துறை​யில் ஏற்​படுத்​தப்பட்ட புரட்​சி, சமூகப் பாது​காப்பு ஓய்​வூ​திய உயர்வு போன்​றவை எங்​களுக்​குப் பக்​கபல​மாக இருக்​கும்.

2021-ம் ஆண்டு தேர்​தலை விட​வும் இந்த முறை இடது முன்​னணிக்​குக் கூடு​தல் இடங்​கள் கிடைக்​கும். கேரளா​வில் ஒரு வரலாற்​றுச் சிறப்​புமிக்க வெற்​றியை மக்​கள் மீண்​டும் எங்​களுக்கு வழங்​கு​வார்​கள் என்​ப​தில் எள்​ளள​வும் சந்​தேகமில்​லை. அனை​வரை​யும் உள்​ளடக்​கிய வளர்ச்​சியை நோக்கி கேரளா முன்​னேறும். இவ்​வாறு பின​ரா​யி விஜயன்​ தெரி​வித்​தா​ர்​.

SCROLL FOR NEXT