இந்தியா

வடக்கு கேரளத்தில் முந்தும் எல்டிஎஃப்; வயநாடு, மலப்புரத்தில் யுடிஎஃப் வெற்றிமுகம் - கருத்துக் கணிப்பில் தகவல்

செய்திப்பிரிவு

திருவனந்தபுரம்: கேரளத்தில் மொத்​தம் 140 சட்​டப் பேர​வைத் தொகு​தி​கள் உள்​ளன. மெஜாரிட்​டி​யுடன் ஆட்சி அமைக்க ஒரு கட்​சிக்கு 71 தொகு​தி​கள் தேவை என்ற நிலை உள்​ளது.

இந்​தத் தேர்​தலில் மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் தலை​மை​யிலான இடது​சாரி ஜனநாயக முன்​னணி க்கும் (எல்​டிஎஃப்) காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்​கிய ஜனநாயக முன்​னணிக்கும் (​யுடிஎஃப்) இடையே பலத்த போட்டி உள்​ளது. அதே​நேரம் பாஜக​வும் சில தொகு​தி​களில் இரு முன்​னணி வேட்​பாளர்​களுக்​கும் பலத்த சவாலை அளித்து வரு​கிறது.

          

இந்​நிலை​யில் மனோரமா நியூஸ்​-சி வோட்​டர்ஸ் நடத்​திய கருத்​துக்​கணிப்​பில் காசர்​கோடு, கண்​ணூர் உள்ளிட்ட வடக்கு கேரளத்​தில் எல்​டிஎஃப் அணி அதிக இடங்​களைக் கைப்​பற்​றும் என்று தெரி​கிறது. யுடிஎஃப் முன்​னணி வயநாடு, கோழிக்​கோடு, மலப்​புரம் ஆகிய மாவட்​டங்​களில் அதிக இடங்​களைக் கைப்​பற்​றும் என்​று தெரிகிறது.

காசர்​கோடு மாவட்​டத்​தி​லுள்ள மஞ்​சேஷ்வர் தொகு​தி​யில் பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் கே. சுரேந்​திரன் போட்​டி​யிடு​கிறார். இதே தொகு​தி​யில் கடந்த 2021-ல் போட்​டி​யிட்ட சுரேந்​திரன், வெறும் 745 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி கண்​டார்.

இம்​முறை​யும் அவர் குறைந்த வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் தோல்வி அடைய வாய்ப்​புள்​ள​தாகத் தெரி​கிறது. இந்​தத் தொகு​தி​யில் யுடிஎஃப் அணி வேட்​பாளர் ஏகேஎம் அஷ்ரப்​(​முஸ்​லிம் லீக்) வெற்றி பெற அதி​க வாய்ப்பு உள்ளது.

காசர்​கோடு மாவட்​டத்​தி​லுள்ள 5 தொகு​தி​களில் 2 முதல் 4 தொகு​தி​களில் எல்​டிஎஃப் அணி வெற்றி பெற வாய்ப்​புள்​ளது. யுடிஎஃப் அணி ஒன்று முதல் 3 தொகு​தி​களில் வெல்ல வாய்ப்​புள்​ளது. என்​டிஏ அணிக்கு இங்கு ஒரு சீட் வெல்​ல வாய்ப்​பு​ உள்ளது.

கண்​ணூர் மாவட்​டத்​தி​லுள்ள 11 தொகு​தி​யில் எல்​டிஎஃப் அணிக்கு 6 முதல் 8 இடங்​களும், யுடிஎஃப் அணிக்கு 3 முதல் 5 இடங்​களும் கிடைக்​கும். வயநாடு மாவட்​டத்​தில் உள்ள 3 தொகு​தி​களை​யும் யுடிஎஃப் கைப்​பற்​றும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

அதே​போல் கோழிக்​கோடு மாவட்​டத்​தில் உள்ள 13 தொகு​தி​களில் 5 முதல் 7 இடங்​களை​யும், எல்​டிஎஃப் 6 முதல் 8 இடங்​களை​யும் கைப்​பற்​றும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மலப்​புரத்​தி​லுள்ள 16 தொகு​தி​களில் யுடிஎப் 14 முதல் 16 இடங்​களை​யும், எல்​டிஎஃப் 2 இடங்​களை​யும் வெல்​லும்​ என்​றும்​ கருத்​துக்​கணிப்​பில்​ தெரிவி​க்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT