இந்தியா

லாலு பிரசாத் மனு மீது இன்று விசாரணை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராஷ்ட்​ரிய ஜனதா தள தலை​வர் லாலு பிர​சாத் யாதவ், ஐக்​கிய முற்​போக்​குக் கூட்​டணி ஆட்​சி​யின்​போது ரயில்வே அமைச்​ச​ராக இருந்​தார். அப்​போது, ரயில்வே வேலைக்கு லஞ்​ச​மாக நிலம் பெறப்​பட்​ட​தாக புகார் எழுந்​தது.

இது தொடர்​பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கிறது. இந்த வழக்​கில் லாலு, அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி மற்​றும் 11 பேருக்கு எதி​ராகக் சிறப்பு நீதி​மன்​றம் கடந்த அக்​டோபர் 13-ம் தேதி குற்​றச்​சாட்​டு​களைப் பதிவு செய்​தது. இதை எதிர்த்து லாலு தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனு டெல்லி உயர் நீதி​மன்​றத்​தில் இன்று விசா​ரணைக்கு வரும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

SCROLL FOR NEXT