கர்​நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் உடன் அமைச்சர் ராமலிங்க ரெட்டி

 
இந்தியா

ராஜினாமாவை திரும்ப பெற்றார் கர்நாடக அமைச்சர் ராமலிங்க ரெட்டி

இரா.வினோத்

பெங்களூரு: கர்​நாடக முதல்​வ​ராக டி.கே.சிவகு​மார் கடந்த 3-ம் தேதி பதவி​யேற்​றார். அவருடன் துணை முதல்​வர் உட்பட 12 அமைச்​சர்​கள் பதவி​யேற்​றனர்.

இதில் மூத்த அமைச்​சர் ராமலிங்க ரெட்​டிக்கு நீர்​வளத் துறை ஒதுக்​கப்​பட்​டது. இதனால் அதிருப்தி அடைந்த ராமலிங்க ரெட்டி நேற்று முன்​தினம் தனது பதவியை ராஜி​னாமா செய்​தார். பதவி​யேற்ற 2-வது நாளிலே மூத்த‌ அமைச்​சர் ராஜி​னாமா செய்​த​தால் முதல்​வருக்கு நெருக்​கடி ஏற்​பட்​டது.

இதையடுத்து முதல்​வர் டி.கே. சிவகு​மார், ராமலிங்க ரெட்​டியை சமா​தானப்​படுத்​தும் முயற்​சி​யில் இறங்​கி​னார். அவருடன் 2 முறை தொலைபேசி​யில் பேசிய அவர், உடனடி​யாக ராஜி​னாமா கடிதத்​தைத் திரும்​பப் பெறு​மாறு வலி​யுறுத்​தி​னார்.

முன்​னாள் முதல்​வர் சித்​த​ராமை​யா​வும் ராமலிங்க ரெட்​டி​யிடம் இதுகுறித்து பேசினர். இதைத் தொடர்ந்து கர்​நாடக காங்​கிரஸ் மேலிடப் பொறுப்​பாளர் ரந்​தீப் சிங் சுர்​ஜே​வாலா ஒரு மணி நேரம் ஆலோ​சித்​தார்.

இந்​நிலை​யில் முதல்​வர் டி.கே.சிவகு​மார் நேற்று பெங்​களூருவில் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, ‘‘ராமலிங்க ரெட்டி என் நண்​பர். அவரது பிரச்​சினை பேசி முடித்​தாகி விட்​டது. அவர் எனக்கு வாட்ஸ் அப்​பில் தான் ராஜி​னாமா கடிதம் அனுப்​பி​னார். அதனை திரும்ப பெறு​வ​தாக கூறி​விட்​டார். எனவே அதை பெரிதுபடுத்த வேண்​டாம். புதிய கதைகளை உரு​வாக்கி அரசுக்கு நெருக்​கடி கொடுக்​க வேண்​டாம்​’’ என்​றார்​.

SCROLL FOR NEXT