பெங்களூரு: கர்நாடக முதல்வராக டி.கே.சிவகுமார் கடந்த 3-ம் தேதி பதவியேற்றார். அன்றைய தினம் டி.கே.சிவகுமாருடன் துணை முதல்வர் உட்பட 12 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றனர்.
அவர்களில் மூத்த அமைச்சர் ராமலிங்க ரெட்டிக்கு நீர்வளத் துறையும், கே.ஜே.ஜார்ஜிக்கு மின்சாரம் மற்றும் சுற்றுலா துறையும் ஒதுக்கப்பட்டது. அவர்கள் வேறு துறையை கோரிய நிலையில் இந்த துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதால் இருவரும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ராமலிங்க ரெட்டி நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பதவியேற்ற 2-வது நாளில் மூத்த அமைச்சர் ராஜினாமா செய்ததால் முதல்வர் டி.கே.சிவகுமாருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிருப்தி அடைந்துள்ள ராமலிங்க ரெட்டியை சமாதானப்படுத்தும் முயற்சியில் அவர் இறங்கியுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரான ராமலிங்க ரெட்டி 6 முறை அமைச்சர் பதவி வகித்துள்ளார்.
உள்துறை, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் அமைச்சர் பதவிகளை வகித்துள்ள அவர் மீது பெரிய அளவில் ஊழல் புகார் எதுவும் எழுந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.