மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக நீர் வளத்துறை அதிகாரிகளுடன் கடந்த 2018ம் ஆண்டே டி.கே.சிவகுமார் ஆய்வு செய்தார். (கோப்புப் படம்)

 
இந்தியா

மேகேதாட்டு அணை திட்டத்தை நிறைவேற்ற தீவிரம்: பூமி பூஜை போட கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார் உறுதி

இரா.வினோத்

பெங்களூரு: மேகே​தாட்டு அணை திட்​டத்தை நிறைவேற்ற கர்நாடக முதல்​வர் டி.கே.சிவகு​மார் தீவிர​மாக இருக்​கிறார்.

கர்​நாடக மாநிலம் பெங்​களூரு தெற்கு (முன்பு ராம்​நகர்) மாவட்டத்​தில், காவிரி ஆற்​றின் குறுக்கே மேகே​தாட்டு என்ற இடத்தில் அணை கட்ட மாநில அரசு 1991-ல் இருந்து முயன்று வருகிறது. காவிரி நதி நீர் பங்​கீட்டு வழக்கு தீர்ப்​பா​யம் மற்​றும் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு நிலு​வை​யில் இருந்​த​தால் அதற்​கான பணி​கள் அப்​போது வேகமெடுக்​க​வில்​லை.

காவிரி வழக்​கில் 2018-ல் உச்ச நீதி​மன்​றம் இறுதி தீர்ப்​பளித்​ததை தொடர்ந்​து, கர்​நாடக அரசு மேகே​தாட்டு திட்​டத்தை மீண்​டும் கையிலெடுத்​தது. சுமார் 9,000 ஏக்​கர் பரப்​பள​வில் ரூ.14,000 கோடியில் 67.16 டிஎம்சி கொள்​ளளவு கொண்ட அணையை கட்டப்போவ​தாக கர்​நாடக அரசு அறி​வித்​தது. இதற்​கான ஆரம்​பக்​கட்ட திட்ட வரைவு அறிக்​கையை தயார் செய்​து, மத்​திய அரசிடம் தாக்​கல் செய்​தது.

இந்​நிலை​யில் மேகே​தாட்டு திட்​டத்​தை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தது. ஆனால், இந்தத் திட்​டம் ஆரம்​பக் கட்​டத்​தில் இருப்​ப​தாகக் கூறி, தமிழக அரசின் கோரிக்​கையை உச்ச நீதி​மன்​றம் ஏற்க மறுத்​தது. இதையடுத்து கர்​நாடக அரசு விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்​கும் பணியை முடுக்கி விட்​டுள்​ளது.

இதற்​காக ராம்​நகரில் அலு​வல​கம் திறக்​கப்​பட்​டு, அணை கட்டுவதற்​கான இடம், வரைப்​படம் தயாரிக்​கும் பணி​யில் நீர்வளத் துறை நிபுணர்​கள் ஈடு​பட்​டுள்​ளனர். கர்​நாடக முதல்வராக பொறுப்​பேற்​றிருக்​கும் டி.கே.சிவகு​மாரின் சொந்த ஊரான கனகபுரா தாலுகா​வுக்கு உட்​பட்ட சரகத்​தில் மேகே​தாட்டு திட்​டம் வரு​தால் அங்கு அணை கட்ட வேண்​டும் என்​ப​தில் அவர் ஆரம்​பம் முதலே ஆர்​வ​மாக இருக்​கிறார். மத்​திய ஜல்​சக்தி துறை அமைச்​சர் சி.ஆர்​.​பாட்​டீலை​யும் சந்​தித்​து அனுமதி வழங்க கேட்டுள்ளார்.

இது குறித்து கர்​நாடக நீர்ப்​பாசனத் துறை அதி​காரி​கள் கூறுகையில்,"மேகே​தாட்டு திட்​டம் டி.கே.சிவகு​மாரின் கனவு திட்ட​மாகும். அதை அவர் தனது ஆட்சி காலத்​தில் நிறைவேற்ற வேண்​டும் என்​ப​தில் உறு​தி​யாக இருக்​கிறார். தான் முதல்​வ​ராக இருக்​கும் போது அணைக்கு பூமி பூஜை நடத்த வேண்​டும் என்பதில் 100 சதவீதம் பிடி​வாத​மாக இருக்​கிறார். எனவே, மேகேதாட்டு விவ​காரம் விரை​வில் அடுத்​தக் கட்​டத்தை நோக்கி நகரும்" என்​றனர்.

SCROLL FOR NEXT