புதுடெல்லி: தேர்தல் ஆணையர்களை நியமிப்பதில் அரசின் ஆதிக்கம் குறித்து, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இது 2 நீதிபதிகள் அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தியது.
இதில் நீதிபதிகளிடையே முரண்பாடு ஏற்பட்டது. நீதிபதி தீபாங்கர் தத்தா, உயர் அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என்றும் நீதிபதி சதீஷ் சந்திர சர்மா மாற்ற வேண்டுமென்றும் தீர்ப்பளித்ததால் வழக்கு தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.