இந்தியா

நான்கே மாதங்களில் 22 பேருக்கு மரண தண்டனை: உ.பி.யில் நீதிபதி அதிரடி

செய்திப்பிரிவு

முஷாபர்நகர்: உத்தர பிரதேச விரைவு நீதி​மன்ற நீதிபதி ஒரு​வர் நான்கே மாதங்​களில் 22 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளார்.

உத்தர பிரதேசத்​தின் முஷாபர்​நகர் விரைவு நீதி​மன்​றத்​தின் நீதிபதி​யாக ரவி​கு​மார் திவாகர் (46) பணி​யாற்றி வரு​கிறார். வாராணசி கியான்​வாபி மசூதி தொடர்​பான வழக்கு கடந்த 2022-ம் ஆண்டு இந்த நீதிபதி முன்பு விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது கியான்​வாபி மசூ​தியை ஆய்வு செய்ய அவர் உத்​தர​விட்​டார்.

இது​போன்று பல்​வேறு துணிச்​சலான உத்​தர​வு​கள், தீர்ப்​பு​களை அவர் பிறப்​பித்து வரு​கிறார். ஊர்க்​காவல் படை வீரர் கொலை வழக்​கில் கடந்த ஜூலை 2-ம் தேதி தீர்ப்பு வழங்​கிய நீதிபதி ரவி​கு​மார், தீபக் என்​பவருக்கு மரண தண்​டனை விதித்​தார்.

வழிப்​பறி மற்​றும் கொலை வழக்​கில் கடந்த ஜூலை 17-ம் தேதி தீர்ப்பு வழங்​கிய நீதிபதி ரவி​கு​மார், குற்​றம் நிரூபிக்​கப்​பட்ட 4 பேருக்​கும் மரண தண்​டனை விதித்​தார்.

12 வயது சிறு​வன் சுட்​டுக் கொல்​லப்​பட்ட வழக்​கில் கடந்த 13-ம் தேதி தீர்ப்பு வழங்​கிய அவர், 4 பேருக்கு மரண தண்​டனை விதித்தார். ஒட்​டுமொத்​த​மாக கடந்த 4 மாதங்​களில் 22 பேருக்கு நீதிபதி ரவி​கு​மார் தி​வாகர் மரண தண்​டனை வி​தித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT