ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் | கோப்புப் படம்

 
இந்தியா

ஜார்க்கண்ட் அரசின் ‘தேர்வு ரத்து’ அறிவிப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை

மோகன் கணபதி

ராஞ்சி: 11-வது முதல் 13-வது வரையிலான ஜார்க்கண்ட் அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​ய (ஜேபிஎஸ்சி) தேர்வுகள் மூலம் பணியமர்த்தப்பட்ட அரசு ஊழியர்களின் நியமனங்களை ரத்து செய்யும் மாநில அரசின் அறிவிப்புக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஜார்க்​கண்ட் மாநிலத்​தின் அரசுப் பணி​யாளர் தேர்வாணை​யம் நடத்​திய சிவில் சர்​வீசஸ் தேர்​வு, ஜேஎஸ்எஸ்சி உள்​ளிட்ட தேர்​வு​களில் வினாத்​தாள்​கள் முறை​கேடு​கள் நடந்​திருப்​ப​தாகக் குற்றஞ்சாட்​டி, 3 வாரங்களுக்​கும் மேலாக தலைநகர் ராஞ்​சி​யில் மாணவர்கள் போராட்​டம் நடத்​தினர்.

போராட்​டத்​தின்​போது போராட்​டக்​காரர்​களுக்​கும் காவல் துறையினருக்​கும் இடையே கடும் மோதல் வெடித்​தது. போராட்டம் தீவிரம் அடைந்​த​தால் ஜார்க்​கண்ட் முதல்​வர் ஹேமந்த் சோரன் தலை​மை​யில் அமைச்​சர​வைக் கூட்​டம் கடந்த 17-ம் தேதி நடை​பெற்​றது.

இந்​தக் கூட்​டத்​தில், கடந்த 2014-ம் ஆண்டு ​முதல் டிஎஸ்​ஆர் டேட்டா பிராசஸிங் நிறு​வனம் என்ற ஒப்பந்த நிறு​வனம் மூலம், மாநிலத்​தில் நடத்​தப்​பட்ட அனைத்து வேலை​வாய்ப்​புத் தேர்​வு​கள், ஜேஎஸ்​எஸ்சி - சிஜிஎல் தேர்வு ஆகிய​வற்றை ரத்து செய்ய மாநில அரசு முடிவு செய்​துள்​ள​தாக முதல்​வர் ஹேமந்த் சோரன் அறி​வித்​தார். இதனால், மாணவர்​கள் தங்​களது போராட்​டத்​தைத் திரும்ப பெறு​வ​தாக அறி​வித்​தனர்.

ஜார்க்​கண்ட் அரசின் இந்த அறிவிப்பு காரணமாக, கடந்த 12 ஆண்​டு​களில் அரசுப் பணிக்கு தேர்ந்​தெடுக்​கப்​பட்ட 2,600-க்கும் மேற்பட்டோர் தங்கள் வேலைகளை இழக்கும் அபாயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அரசின் இந்த அறிவிப்புக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

அவர்களில் சிலர், அரசின் முடிவை எதிர்த்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

தேர்வு முறைகேடுகள் குறித்த விசாரணையை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், ஆனால் ஒட்டுமொத்த தேர்வையும் ரத்து செய்வதை தாங்கள் எதிர்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

திறமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படக் கூடாது என்றும், முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டவர்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.

இந்நிலையில், ஹேமந்த் சோரன் அரசின் அறிவிப்புக்கு ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உயர் நீதிமன்றத்தின் இந்த தடையை, மனுதாரர்கள் வரவேற்றுள்ளனர்.

SCROLL FOR NEXT