இந்தியா

“ஜந்தர் மந்தர் 140 கோடி இந்தியர்களுக்​கு சொந்தமானது... சர்வாதிகார மத்திய அரசால் அதை மாற்ற முடியாது” - சிஜேபி தலைவர் அபிஜித் திப்கே

செய்திப்பிரிவு

புதுடெல்லி: டெல்லி ஜந்தர் மந்​தரில் போ​ராட்​டம் நடத்​து​வதற்கு தடை​வி​தித்​துள்​ளது மிக​வும் கண்​டனத்​துக்​குரியது. அது 140 கோடி இந்​தி​யர்​களுக்​கும் சொந்​த​மான இடம் என கரப்​பான் பூச்சி ஜனதா கட்​சி​யின் (சிஜேபி) தலை​வர் அபிஜித் திப்கே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: டெல்லி ஜந்​தர் மந்​தர் பகு​தி​யில் தேசி​யக் கொடியை ஏற்​றியதற்​காக சிஜேபி தொண்​டர்​கள் பலர் டெல்லி காவல்​துறை​யின​ரால் தடுத்து வைக்​கப்​பட்டு கைது செய்​யப்​பட்ட சம்​பவம் கடும் கண்​டனத்​துக்​குரியது. ஜந்​தர் மந்​தரில் தேசி​யக் கொடி ஏற்​று​வதை சட்ட மீறல் என்று கூறு​பவர்​கள் நாட்​டின் துரோகி​கள்.

எங்​கள் குழு​வினர் இன்று காலை ஜந்​தர் மந்​தருக்​குச் சென்று மூவர்​ணக் கொடியை ஏற்​றினர். தேசி​யக் கொடியை ஏற்​று​வது எப்​போது சட்​ட​விரோத​மான குற்​ற​மானது? ஜந்​தர் மந்​தர் என்​பது வெறும் இடம் மட்​டுமல்ல, அது ஒரு எதிர்ப்​பின் ஆன்மா என்​பதை ஆட்​சி​யாளர்​கள் புரி்ந்து கொள்ள வேண்​டும்.

ஜந்​தர் மந்​தருக்கு யாரும் சென்று மூவர்​ணக் கொடியை ஏற்​றக்​கூ​டாது என்று இந்த சர்​வா​தி​கார அரசு விரும்​பு​கிறது. ஒட்​டுமொத்த நாடும் தங்​களின் சொந்​தச் சொத்து என்று அவர்​கள் நினைக்​கிறார்​கள். ஜந்​தர் மந்தர் என்​பது இந்த நாட்​டின் 140 கோடி மக்களுக்​கும் சொந்​த மானது.

எங்​களது கோரிக்​கைகள் நிறைவேறும் வரை போராட்​டம் தொடரும். ஞானேஷ் குமார் பதவி வில​கும் வரை தொடர்ந்து கொடி ஏற்றி போ​ராட்​டத்​தில் ஈடு​படு​வோம். இவ்​வாறு திப்கே தெரி​வித்​தார். டெல்லி காவல்​துறை திங்​கள்​கிழமையன்று ஜந்​தர் மந்​தரை போராட்​டங்​கள் நடத்​தும் அதி​காரப்​பூர்வ இடங்​களின் பட்டியலிலிருந்து நீக்​கியது. அதற்கு மாற்​றாக, போராட்​டங்​கள் நடத்த ராம் லீலா மைதானம், புராரி மைதானம் மற்​றும் கிழக்கு டெல்​லி​யில் உள்ள சி.பி.டி. மைதானம் ஆகிய மூன்று மாற்று இடங்களை அறி​வித்​தது.

டெல்​லி​யில் ஜந்​தர் மந்​தர் பகு​தி​யில் நேற்று காலை ஒன்​றுகூடி போ​ராட்​டத்​தில்​ ஈடுபட முயன்​ற அசுதோஷ் ரங்​​கா, சவுரவ்​ ​தாஸ்​ மற்​றும்​ அஜிங்​க்​யா ஷிண்​டே உள்​ளிட்​ட சிஜேபி கட்​சி நிர்வாகிகளை டெல்​லி ​காவல்​துறை கைது செய்​ததை அடுத்​து திப்கே இந்​தக்​ கருத்​துக்​களைத்​ தெரி​வித்​தது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT