இந்தியா

உலகின் உயரமான செனாப் பாலத்தின் மீது வந்தே பாரத் ரயிலை 100 கி.மீ. வேகத்தில் இயக்கி சாதனை

செய்திப்பிரிவு

ஜம்மு: ஜம்மு காஷ்மீரின் செனாப் ஆற்​றி​லிருந்து 359 மீட்​டர் உயரத்​தில் அமைந்​துள்​ளது செனாப் ரயில் பாலம். உலகின் மிக உயர​மான ரயில்வே இரும்பு வளைவுப் பால​மான இது நில அதிர்வு மற்​றும் பலத்த காற்று சூழலைத் தாங்​கும் வகை​யில் வடிவ​மைக்​கப்​பட்​டுள்​ளது. இப்​பாலத்​தின் வழி​யாக, ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா ரயில் நிலை​யத்​தில் இருந்து கத்​ரா–ஸ்ரீநகர் வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்​தார்.

இந்​நிலை​யில், செனாப் ஆற்​றுப் பாலத்​தை​யும், இந்​தி​யா​வின் முதல் கேபிள் ரயில்வே பால​மான அஞ்சி பாலத்​தை​யும் வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் ரயில் மணிக்கு 100 கி.மீ. வேகத்​தில் கடந்து சாதனை படைத்​தது.

இதுகுறித்​து, வடக்கு கோட்ட ரயில்வே மூத்த வணிக மேலா​ளர் உச்​சித் சிங்​கால் கூறிய​தாவது: வடக்கு ரயில்​வே​யின் ஜம்மு கோட்​டத்​துக்கு உட்​பட்ட ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்​ரா–பனிஹால் ரயில் பிரி​வில் வேகத்தை அதி​கரிப்​ப​தற்​கான சோதனை கடந்த வியாழக்​கிழமை நடை​பெற்​றது.

அப்​போது, வந்தே பாரத் எக்​ஸ்​பிரஸ் உலகின் மிக உயர​மான செனாப் ரயில்வே பாலத்​தை​யும், இந்​தி​யா​வின் முதல் கேபிள் பால​மான அஞ்சி பாலத்​தை​யும் மணிக்கு 100 கி.மீ. வேகத்​தில் கடந்து புதிய சாதனை படைத்​தது. இதன்​மூலம், ஸ்ரீ மாதா வைஷ்ணவி தேவி கத்ரா முதல் பனிஹால் வரையி​லான பயண நேர​மும் குறை​யும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT