இந்தியா

காஷ்மீர் அரசு வசமானது ஜமாத்-இ-இஸ்லாமி பள்ளிகள்

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: காஷ்மீரில் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு மற்றும் அதன் கல்வி அறக்கட்டளையான ஃபலா-இ-ஆம் அறக்கட்டளையுடன் தொடர்புடைய 58 பள்ளிகளை காஷ்மீர் அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 200-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளைத் தற்காலிகமாக மூட அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் ஜம்மு- காஷ்மீர் கல்வி அமைச்சர் சகீனா இட்டூ கூறுகையில், "மாணவர்களின் நலன் கருதியே அரசு இந்த முடிவை எடுத்தது" என்றார்.

கடந்த 2019ம் ஆண்டு ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பைச் சட்டவிரோத அமைப்பு என மத்திய அரசு அறிவித்துத் தடை விதித்தது. இதனைத் தொடர்ந்து, 1972-ல் தொடங்கப்பட்ட ஃபலா-இ-ஆம் அறக்கட்டளை கல்வி கற்பிக்கத் தகுதியற்றது எனக் கூறி, அதன் கல்வி நிறுவனங்களுக்குத் துணை நிலை ஆளுநர் நிர்வாகம் 2022-ல் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT