இந்தியா

ஜெகன் மோகன் ரெட்டி வழக்கை தினமும் விசாரிக்கிறது நீதிமன்றம்

என். மகேஷ்குமார்

ஹைதராபாத்: ஒய்​.எஸ்​.ஆர் காங்​கிரஸ் கட்​சித் தலை​வரும், முன்னாள் ஆந்​திர முதல்​வரு​மான ஜெகன் ​மோகன் ரெட்டி​யின் சட்ட​விரோத சொத்​துக்​கு​விப்பு வழக்​கில், அமலாக்கத்துறை தொடர்​பான வழக்​கு​களை​ இனி தினந்​தோறும் ஹைத​ரா​பாத் சிபிஐ நீதி​மன்​றம் விசா​ரிக்க உள்​ளது.

ஹைத​ரா​பாத் நாம்​பல்​லி​யில் உள்ள சிபிஐ சிறப்பு நீதி​மன்​றத்​தில் இவ்​வழக்கு கடந்த 9 ஆண்​டு​களாக நடை​பெற்று வரு​கிறது. இதனிடையே ஜெகன்​ மோகன் ரெட்டி முதல்​வர் ஆனதால், ‘முதல்வர் பதவி​யில் இருப்​பவர் ஒவ்​வொரு முறை​யும் நீதிமன்றத்தில் ஆஜராகும்​போது அரசுப் பணம் அதி​கம் செலவாகிறது’ என்பதை காரணம் காட்டி நேரில் ஆஜராக விலக்கு கோரி​னார். நீதி​மன்​ற​மும் அனு​மதி அளித்​ததால் வழக்கு மந்தமானது.

ஜெகன்​ மோகன் ரெட்​டி​யின் சொத்​துக்​கு​விப்பு வழக்கை சிபிஐயும், அமலாக்​கத்​துறை​யும் விசா​ரித்​தன. இதில் அமலாக்​கத்​துறை​யின் குற்​றப்​பத்​திரிகை கடந்த 9 ஆண்​டு​களாக நிலு​வை​யில் உள்​ளது. இந்​நிலை​யில், அமலாக்​கத்​துறை​யினர் ஆந்​திர உயர் ​நீ​தி​மன்​றத்​தில் மனுதாக்​கல் செய்​தனர். அதில், “இது​வரை ஜெகன் ​மோகன் வழக்கை சிபிஐ மட்​டுமே விசா​ரித்து வரு​கிறது; எங்​கள் துறை​யின் வழக்கு ஏற்​கப்​பட​வில்​லை.

எனவே, எங்​கள் துறை தாக்​கல் செய்த குற்​றப்​பத்​திரி​கை​யை​யும் ஏற்​று, சிபிஐ நீதி​மன்​றம் தினசரி விசா​ரணை நடத்த உத்​தர​விட வேண்​டும்” எனக் கோரப்​பட்​டிருந்​தது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்​தது. அப்போது நீதிப​தி, இனி அமலாக்​கத்​துறை​யின் வழக்​கை​யும் சேர்த்​துத் தினசரி விசா​ரணை நடத்த வேண்​டும் என உத்​தர​விட்​டார். மேலும், இது தொடர்​பாக ஜெகன்​ மோகனின் வழக்​கறிஞர்​களுக்​கு நோட்​டீஸ்​ பிறப்​பித்​தார்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT