இந்தியா

தேர்வு வினாத்தாள் கசிவை தடுப்பது தேசத்தின் பொறுப்பு: என்டிஏ எம்.பி.க்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேர்வு வினாத்தாள் கசி​வைத் தடுப்​பது என்​பது தேசத்​தின் பொறுப்​பாகும் என்று பிரதமர் நரேந்​திர மோடி பேசியுள்​ளார்.

​நா​டாளு​மன்ற மழைக்​கால கூட்​டத்​தொடரை முன்​னிட்​டு, தேசிய ஜனநாயகக் கூட்​டணி சார்​பில் மங்​கள் மிலன் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடை​பெற்​றது. தேசிய ஜனநாயகக் கூட்​டணி எம்​பிக்​கள் கலந்​து​கொண்ட இந்​தக் கூட்​டத்​தில் உரை​யாற்​றிய பிரதமர் நரேந்​திர மோடி, நீட் வினாத்​தாள் கசிவு குறித்​தும், அதை தடுப்​ப​தற்​கான வழிகள் குறித்​தும் விளக்கி உள்​ளார். இந்த கூட்டத்தில், கடந்த மே 3-ம் தேதி நடை​பெற்ற இளநிலை மருத்​துவ படிப்​பு​களுக்​கான நீட் தேர்வு வினாத்​தாள் கசிவு குறித்து பிரதமர் மோடி முதல் முறை​யாக பேசி​யுள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

இந்​தக் கூட்​டத்​தில் பிரதமர் மோடி பேசி​ய​தாக மத்​திய நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: நீட் வினாத்​தாள் கசிவுக்​குப் பொறுப்பானவர்களுக்கு மிகக் கடுமை​யான தண்​டனை வழங்கப்பட வேண்​டும் என்​றும், இது​போன்ற வினாத்​தாள் கசிவு மீண்​டும் நடை​பெறாமல் தடுக்​கப்பட வேண்​டும் என்​றும் பிரதமர் வலி​யுறுத்​தி​னார்.

வினாத்​தாள் கசிவு ஒரு கொடிய பாவச் செயல். இளைஞர்​கள் தவறாக வழிநடத்​தப்​படு​கிறார்​கள். தவறான பாதை​யில் செல்​வது எளிது. ஆனால் அதிலிருந்து மீண்​டும் சரி​யான பாதைக்கு திரும்புவது மிக​வும் கடினம். அவர்​களை தூண்​டி​வி​டா​மல், நாம் அவர்​களை சரி​யான பாதைக்கு கொண்டு வர வேண்​டும். அது நமது பொறுப்​பு. இளைஞர்​களின் எதிர்​காலமே முக்​கி​யம். இதில் அரசி​யல் செய்​வதை தவிர்க்க வேண்​டும் என்​றும் பிரதமர் வலியுறுத்​தி​னார்.

தேர்வு வினாத்​தாள் கசி​வைத் தடுத்​தல் தேசத்​தின் பொறுப்​பாகும் என்​றும், குற்​ற​வாளி​களுக்கு கடுமை​யான தண்​டனை வழங்க வேண்​டும் என்​றும், எதிர்​காலத்​தில் போட்​டித் தேர்​வு​களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்​டும் என்​றும் பிரதமர் மோடி கூட்​டத்​தில் வலி​யுறுத்​தி​னார்.

குறை​பாடு​களே இல்​லாத, வினாத்​தாள் கசிவு நடை​பெறாத வகையில் ஒரு தேர்வு முறையை உரு​வாக்க கூட்டு முயற்​சிகள் தேவை, நீட் தேர்வு வினாத்​தாள் கசிந்த விவ​காரத்​தில் நாடாளு​மன்ற நடவடிக்​கைகளை ஆதரிப்​ப​தில் என்​டிஏ கூட்​ட​ணிக் கட்சிகள் ஒற்றுமை​யுடன் இருக்க வேண்​டும் என்​றும் பிரதமர் அப்போது தெரி​வித்​தார்.

அரசி​யல் கருத்து வேறு​பாடு​கள் இருந்​தா​லும், நாட்​டின் எதிர்காலம் மற்​றும் இளைஞர்​களின் நலனுக்​காகச் செயல்பட வேண்டிய கூட்​டுப் பொறுப்பு அனைத்து நாடாளு​மன்ற உறுப்பினர்​களுக்​கும் உள்​ளது என்​றும் பிரதமர் மோடி எடுத்துரைத்​தார். இவ்​வாறு அமைச்​சர்​ கிரண்​ ரிஜிஜு தெரிவித்தார்​.

SCROLL FOR NEXT