இந்தியா

ஆக.9, 10-ல் காவடி யாத்திரையில் பங்கேற்கும் சிவ பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர்தூவி வரவேற்க உ.பி. அரசு முடிவு

செய்திப்பிரிவு

லக்னோ: உத்தர பிரதேசத்​தின் மேற்​குப் பகு​தி​களில் நடை​பெறும் காவடி யாத்திரை​யில் பங்​கேற்​கும் சிவபக்​தர்​களை வரவேற்​கும் வகை​யில் ஹெலி​காப்​டரில் இருந்து மலர்​தூ​வும் நிகழ்ச்​சியை மாநில அரசு நடத்​துகிறது.

ஸ்ராவண காவடி யாத்​திரை என்​பது சிவபெரு​மானின் ஸ்ரீவடிவ வழி​பாட்​டிற்​காக, இந்​துக்​களால் தமிழ் மாத​மான ஆடி (ஷ்​ராவண மாதம்) மாதத்​தில் மேற்​கொள்​ளப்​படும் ஒரு புனித யாத்​திரை​யாகும். வடமாநிலங்​களில் பிரபல​மான இந்த யாத்​திரை​யில் பக்​தர்​கள் காவடி போன்ற அமைப்​பில் கங்கை நீரைச் சுமந்து சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்​வர்.

உத்தர பிரதேசத்​தின் மேற்​குப் பகு​தி​களில் நடை​பெறும் காவடி யாத்​திரை​யில் பங்​கேற்​கும் சிவபக்​தர்​களை வரவேற்​கும் வகையில், வரும் 9, 10 ஆகிய தேதி​களில் 7 மாவட்​டங்களில் ஹெலிகாப்​டரில் இருந்து மலர்தூ​வும் நிகழ்ச்​சி​யை, மாநில அரசு நடத்​துகிறது. இதுதொடர்​பாக, உத்​தர​பிரதேச மாநில அரசு வெளியிட்​டுள்ள அட்ட​வணை​யில், வரும் 9-ம் தேதி காலை 8 மணியள​வில் ஹெலி​காப்​டர் லக்​னோ​விலிருந்து பாக்​பத் மாவட்டத்​துக்​குப் புறப்​படு​கிறது. அங்கு காலை 10.30 மணி முதல் 11.15 மணி வரை யாத்​திரி​கர்​கள் மீது மலர் தூவப்​படும்.

அதனைத் தொடர்ந்​து, ஹெலி​காப்​டர் சஹாரன்​பூர் மாவட்​டத்​துக்​குச் சென்​று, அங்கு காலை 11.45 மணி முதல் பிற்​பகல் 12.45 மணி வரை பக்​தர்​களுக்கு மலர்​களால் வரவேற்பு அளிக்​கப்​படும். பின்​னர், முசாஃபர்​நகர் மாவட்​டத்​தில் மதி​யம் 1.30 மணி முதல் 2.15 மணி வரை​யும், மீரட் மாவட்​டத்​தில் பிற்​பகல் 3.45 மணி முதல் 4.30 மணி வரை​யும் மலர்​தூ​வும் நிகழ்ச்சி நடை​பெறும். இதற்​காக, முதல் நாளில் ஹெலி​காப்​டர் மொத்​தம் 6 மணி 10 நிமிடங்​கள் பறக்​கும்.

அடுத்த நாள் 10-ம் தேதி மீரட்​டிலிருந்து புறப்​படும் ஹெலி​காப்​டர், காலை 8.30 மணி முதல் 9.15 மணி வரை காசி​யா​பாத் மாவட்டத்தில் யாத்​திரி​கர்​கள் மீது மலர் தூவும். பின்​னர், ஹாப்​பூர் மாவட்​டத்​தில் காலை 9.45 மணி முதல் 10.30 மணி வரை​யும், புலந்த்​ஷார் மாவட்​டத்​தில் காலை 11.15 மணி முதல் நண்​பகல் 12 மணி வரை​யும் மலர்​களால் பக்​தர்​கள் வரவேற்​கப்​படு​வார்​கள். நிகழ்ச்​சிகள் நிறைவடைந்த பின்​னர், பிற்​பகல் 12.30 மணி​யளவில் ஹெலி​காப்​டர் புலந்த்​ஷாரிலிருந்து புறப்​பட்டு லக்​னோவுக்கு சென்​றடை​யும்.

2-ம் நாளில் ஹெலி​காப்​டர் மொத்​தம் 3 மணி 45 நிமிடங்​கள் பறக்கும். ஆண்டுதோறும் நடை​பெறும் ஸ்ராவண காவடி யாத்​திரை சிறப்​பாக​வும், பாது​காப்​பாக​வும், ஒழுங்​காக​வும் நடை​பெறு​வதை உறுதி செய்​வதுடன், பக்​தர்​களுக்கு ஆன்​மிக நிறைவை அளிக்​கும் அனுபவத்தை வழங்​கும் நோக்​கில் இந்த ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டுள்​ள​தாக அரசு கூறியுள்​ளது.

SCROLL FOR NEXT