இந்தியா

தேசிய மாநாட்டு கட்சியில் பிளவா? - ஃபரூக் அப்துல்லா மறுப்பு

செய்திப்பிரிவு

ஸ்ரீநகர்: ஸ்ரீநகரில் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்ட கட்சி எம்எல்ஏ.க்களைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் ஃபரூக் அப்துல்லா கூறியதாவது: தேசிய மாநாட்டுக் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் ஆதாரமற்ற தகவல்கள் முற்றிலும் பொய்யானவை.

இந்த அமைப்பு ஒற்றுமையுடன் உள்ளது. இந்த அமைப்பை உடைக்கலாம் என்று நினைப்பவர்கள், உடைக்க முடியாது என்பதை் புரிந்துகொள்ள வேண்டும். அனைவரது கருத்துகளும் கேட்கப்பட்டுள்ளன. விரைவில் சில நடவடிக்கைகள் எடுக்கப்படும். மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கட்சியையும் அரசையும் வலுப்படுத்துவோம். இவ்வாறு ஃபரூக் அப்துல்லா கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT