இந்தியா

சாரா அலிகான் கேதார்நாத் சென்றால் பாவமா? - உ.பி. முஸ்லிம் மத குருவுக்கு குவியும் கண்டனம்

செய்திப்பிரிவு

லக்னோ: நடிகை சாரா அலிகான் கேதார்நாத் கோயிலுக்கு சென்றதை பாவம் என தெரி​வித்த உத்​தர பிரதேசத்தை சேர்ந்த முஸ்லிம் மத குரு​வுக்கு சமூக வலை​தளங்​களில் கண்​டனங்​கள் குவிந்து வரு​கின்​றன.

பிரபல பாலிவுட் நடிகை​யான சாரா அலிகான் சமீபத்​தில் உத்தராகண்ட் மாநிலம் ருத்​ரபிரயாக் மாவட்​டத்​தில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்​நாத் கோயிலுக்​குச் சென்​றார். இந்​நிலையில், அகில இந்​திய முஸ்​லிம் ஜமாத்​தின் தேசி​யத் தலைவரான மவுலானா ஷஹாபுதீன் ரஸ்வி பரேல்வி, “எந்​தவொரு முஸ்லிமும் மற்​றொரு மதத்​தின் நம்​பிக்​கை​யில் பங்​கேற்று, வழிபாடு நடத்​து​வதும், மதச் சடங்​கு​களைச் செய்​வதும் ஷரியா சட்​டத்​தில் தடை செய்​யப்​பட்​ட​தாகும். சாரா அலிகான் பாவம் செய்து விட்​டார். அவர் மனம் திருந்த வேண்​டும்” என தெரிவித்தார்.

மத குரு​வின் இந்த கருத்​துக்கு சமூக வலை​தளங்​களில் கடுமையான விமர்​சனங்​கள் எழுந்​துள்​ளன. மத குருவை கண்டித்தும், நடிகை சாரா அலிகானுக்கு ஆதர​வாகவும் பலரும் கருத்​துகளை பதி​விட்டு வரு​கின்​றனர்.

எக்ஸ் தளத்​தில் ஒரு பயனர், “ஒரு வயது வந்​தவரின் நம்​பிக்கை, பிரார்த்​தனைகள் மற்றும் ஆன்​மீகத் தேர்​வு​கள் தனிப்​பட்​டவை. குற்​றவுணர்ச்சி மூலமாகவோ அல்​லது மனந்​திரும்​பும்​படி வற்​புறுத்​து​வதன் மூலமாகவோ எந்த மதகுரு​வும் அவற்றை ஆணை​யிட முடி​யாது” என குறிப்​பிட்​டுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT