புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திவால் சட்டத்தில் மாற்றம் செய்வது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு ஏற்கனவே தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.
எனவே, வரும் மார்ச் 9-ல் தொடங்கவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வில் நிலைக்குழுவின் பரிந்துரைகளை உள்ளடக்கிய திவால் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும். இந்த புதிய திருத்தங்கள் மூலம், திவால் நடைமுறைகளுக்கான கால அவகாசம் குறைக்கப்பட்டு, அதன் செயல்திறன் மேம்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்.