திவ்யா சிங்

 
இந்தியா

சைக்கிளில் 14 நாட்களில் எவரெஸ்ட் அடிவாரம் சென்ற முதல் இந்திய பெண்

செய்திப்பிரிவு

லக்னோ: உத்​தரபிரதேச மாநிலம் கோரக்​பூரை சேர்ந்த ஆசிரியை திவ்யா சிங் (28), சைக்​கிளில் எவரெஸ்ட் அடி​வார முகாம் (பேஸ் கேம்ப்) சென்​றடைந்த முதல் இந்​தி​யப் பெண் மற்றும் உலகின் 2வது பெண் என்ற சாதனையை படைத்​துள்​ளார்.

நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வில் தனது பயணத்தை தொடங்கிய அவர், 14 நாட்​கள் கடின​மான பயணத்​துக்கு பிறகு 17,560 அடி உயரத்​தில் உள்ள அடி​வார முகாமை வெற்​றிகர​மாக சென்​றடைந்​தார். இந்​தப் பயணத்​தின்​போது, அவர் மைனஸ் 12 டிகிரி வரையி​லான கடும் குளிர், குறை​வான ஆக்​சிஜன் மற்​றும் அதிவேகக் காற்றை எதிர்​கொண்​டுள்​ளார். திவ்யா தின​மும் 10 முதல் 12 மணிநேரம் செங்​குத்​தான மற்​றும் கரடு​முர​டான மலைப் பாதைகளில் சைக்​கிள் ஓட்​டி​யுள்​ளார்.

          

சைக்​கிள் செல்ல முடி​யாத இடங்​களில், அதை தோளில் சுமந்து கொண்டு முன்​னேறி​னார். அடி​வார முகாமை அடைய சலேரி, சுர்கே, பக்​டிங், நம்ச்சே பஜார், லோபுச்​சே, கோரக் ஷெப் ஆகிய சவாலான இடங்​களை அவர் கடந்​துள்​ளார். அடி​வார முகாமை திவ்யா சென்​றடைந்த தருணத்தை உமா சிங் என்​பவர் இன்ஸ்டாகி​ராமில் பகிர்ந்​துள்​ளார்.

அந்த வீடியோ​வில் திவ்​யா, மலைகளின் பின்​னணி​யில் தனது சைக்​கிளுக்கு அரு​கில் தேசி​யக்​கொடி ஏந்​தி​ய​வாறு காணப்படுகிறார். இந்த வீடியோவுக்​கான விளக்​கத்​தில், “வாழ்த்​துக்​கள் திவ்யா சிங்; சைக்​கிளில் எவரெஸ்ட் அடி​வார முகாம் சென்​றடைந்த இந்​தி​யா​வின் முதல் பெண்​மணி நீங்​கள்​தான். இது நமது கோரக்​பூர், உ.பி. மற்​றும் இந்​தி​யா​வுக்கு ஒரு பெரு​மை​யான தருணம்’’ என்று குறிப்​பிடப்​பட்​டுள்​ளது.

திவ்​யா​வுக்கு சமூக ஊடகங்​களில் பலரும் பாராட்டு தெரி​வித்து வரு​கின்​றனர். இது குறித்து ஒரு​வர் தனது பதி​வில், "இத​னால்​தான் கண்​களில் உறு​தி​யுடன் இருக்​கும் பெண்​களை எனக்​குப் பிடிக்கிறது. இது​போன்று தொடர்ந்து வளர்ந்து வரலாறு படைத்திடுங்​கள்" என்று கூறி​யுள்​ளார்.

SCROLL FOR NEXT