இந்தியா

இந்திய மாணவர் ஷிவாங் கனடாவில் சுட்டுக்கொலை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: கனடாவில் 30 வயது இந்திய பெண் ஹிமன்ஷி குரானா என்ற பெண் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் டொரண்டோ ஸ்கார்பரோ பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்பை படித்து வந்த இந்திய மாணவர் ஷிவாங் அவஸ்தி (26). பல்கலைக்கழக வளாகத்துக்குள் கடந்த செவ்வாய்க்கிழமை மர்மநபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் மாணவரின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அனைத்து உதவிகளையும் வழங்க மாணவரின் குடும்பத்தினரோடு தொடர்பில் உள்ளதாக தூதரகம் கூறியுள்ளது.

SCROLL FOR NEXT