இந்​திய விஞ்​ஞானி அசோக் சென்

 
இந்தியா

இயற்பியலில் வரலாற்றுச் சாதனை: ஆஸ்கார் கிளைன் பதக்கம் வென்ற இந்திய விஞ்ஞானி அசோக் சென்

செய்திப்பிரிவு

பெங்களூரு: இயற்​பியல் துறை​யின் உயரிய விருதுகளில் ஒன்றான மதிப்​புமிக்க ‘ஆஸ்​கார் கிளைன்’ பதக்​கத்தை இந்​திய விஞ்​ஞானி அசோக் சென் பெற்​றுள்​ளார்.

பெங்​களூரு​வில் உள்ள சர்​வ​தேச கோட்​பாட்டு அறி​வியல் மையத்தின் (ஐசி​டிஎஸ்) புகழ்​பெற்ற இயற்​பிய​லா​ள​ரும் பேராசிரியரு​மான அசோக் சென், இயற்​பியல் துறை​யின் உயரிய விருதுகளில் ஒன்​றான மதிப்​புமிக்க ‘ஆஸ்​கார் கிளைன்’ பதக்கத்தைப் பெற்​றுள்​ளார். இதன் மூலம், இவ்​விருதை பெறும் முதல் இந்​திய இயற்​பிய​லா​ளர் என்ற பெரு​மையை அவர் பெற்றுள்​ளார்.

இது தொடர்​பாக ஐசி​டிஎஸ் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “ஐசிடிஎஸ்- இன்ஃபோசிஸ் மாதவா இருக்கை பேராசி​ரியரான அசோக் சென், எஸ்-டூவாலிட்டி, துல்​லிய​மாகக் கணக்​கிடும் கருந்​துளை என்ட்​ரோபி மற்​றும் ஸ்டி​ரிங் ஃபீல்டு கோட்​பாடு ஆகிய​வற்​றில் ஆற்​றிய முன்​னோடிப் பணிகளுக்​காக சர்​வ​தேச அளவில் அங்​கீகரிக்​கப்​பட்​டுள்​ளார். இவை அனைத்​தும் நவீன ஸ்டி​ரிங் கோட்​பாட்டை வடிவ​மைக்க உதவியுள்​ளன.

விருதின் ஒரு பகுதி​யாக, அக்​டோபர் 22-ம் தேதி ஸ்​டாக்​ஹோம் பல்​கலைக்​கழகத்​தில் நடை​பெற்ற கருத்​தரங்​கு​களில் அசோக் சென் ‘நரம்​பிசையி​லிருந்து ஈர்ப்பு விசை, ஈர்ப்பு விசையி​லிருந்து நரம்​பிசை’ என்ற தலைப்​பில் விரிவுரை ஆற்​றினார்” என தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது. ஸ்டி​ரிங் கோட்​பாட்​டுக்கு ஒரு ஒருங்​கிணைக்​கும் கட்​டமைப்பை நிறு​வியதில் ஆற்​றிய பங்​களிப்​பு​களுக்​காக, 2012-ல் அடிப்​படை இயற்​பியலுக்​கான ‘பிரேக்த்ரூ’ பரிசையும், 2014-ல் டிராக் பதக்​கத்​தையும் அசோக் சென் பெற்​றார். இது மட்​டும் இன்றி இந்​திய அரசு இவருக்கு பத்ம (2001) மற்​றும் பத்​மபூஷன் (2013) விருதுகளை வழங்கி கவுர​வித்​துள்​ளது.

‘ஆஸ்​கார் கிளைன்’ சிறப்பு என்ன?

ஸ்​டாக்​ஹோம் பல்​கலைக்​கழகம் மற்​றும் ராயல் ஸ்வீடிஷ் அகாட​மி​யின் நோபல் இயற்​பியல் குழு இணைந்து 1988-ம் ஆண்டு முதல் ‘ஆஸ்​கார் கிளைன்’ விருதை வழங்கி வரு​கிறது. தத்​து​வார்த்த இயற்​பியல் மற்​றும் அண்​ட​வியல் துறை​யில் சிறந்த பங்​களிப்பை வழங்​குபவர்​களுக்கு இது வழங்​கப்​படு​கிறது. ஸ்டீபன் ஹாக்​கிங், பீட்​டர் ஹிக்ஸ் போன்ற உல​கப் புகழ்​பெற்ற விஞ்​ஞானிகள் இவ்​விருதை ஏற்​க​னவே பெற்​றுள்​ளனர் என்​பது குறிப்பிடத்தக்கது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT