இந்தியா

ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்திய காஸ் டேங்கர் கப்பல் ‘ஷிவாலிக்’ முந்த்ரா துறைமுகம் வந்தடைந்தது எப்படி?

செய்திப்பிரிவு

அகமதாபாத்: ஹார்​முஸ் ஜலசந்​தியில்​ இருந்து புறப்​பட்ட இந்​திய காஸ் டேங்​கர் கப்​பல் ஷிவாலிக் நேற்று குஜ​ராத்​தின் முந்த்ரா துறை​முகம் வந்​தடைந்​தது.

கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்​கா-இஸ்​ரேல் நடத்திய கூட்​டுத் தாக்​குதல்​கள் போராக மாறியது. இதனால் ஈரானின் எச்​சரிக்​கை​யால் கச்சா எண்​ணெய் மற்​றும் காஸ் டேங்கர் கப்​பல்​கள் ஹார்​முஸ் ஜலசந்​தியை கடக்க முடி​யாமல் முடங்​கிக் கிடந்​தன. இந்​நிலை​யில், மத்​திய வெளி​யுறவுத்​ துறை அமைச்​சர் எஸ். ஜெய்​சங்​கர், ஈரான் அமைச்​சர் அப்​பாஸ் அராக்சியுடன் நான்கு சுற்​றுப் பேச்​சு​வார்த்​தைகளை நடத்​தி​னார்.

          

மேலும் பிரதமர் நரேந்​திர மோடி ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் கடந்த வாரம் தொலைபேசி​யில் உரையாடினார். இதையடுத்​து, இந்​திய கப்​பல்​களை விடுவிக்க ஈரான் அரசு ஒப்​புதல் அளித்​தது. இதன்​படி, ஷிப்​பிங் கார்ப்​பரேஷன் ஆப் இந்​தி​யா​வுக்​குச் சொந்​த​மான, இந்​தி​யக் கொடி ஏந்திய ஷிவாலிக் என்ற காஸ் (எல்​பிஜி) டேங்​கர் கப்​பல், ஹார்முஸ் ஜலசந்​தி​யைப் பாது​காப்​பாகக் கடந்த பிறகு நேற்று குஜ​ராத்​தின் முந்த்ரா துறை​முகத்தை வந்​தடைந்​தது.

இரண்​டாவது டேங்​கர் கப்​பலான நந்தா தேவி, இன்று மும்பை துறை​முகத்தை வந்​தடை​யும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. மேற்கு ஆசி​யப் போருக்​குப் பிறகு ஹார்​முஸ் ஜலசந்​தி​யைக் கடந்து வந்த இரண்​டாவது மற்​றும் மூன்​றாவது டேங்​கர் கப்​பல்​கள் இவை. சவுதி அரேபி​யா​விலிருந்து கச்சா எண்​ணெயைச் சுமந்தபடி லைபீரியக் கொடி ஏந்​திய கப்​பல்​தான் முதலில் ஹார்முஸ் ஜலசந்​தி​யைக் கடந்து வந்​தது.

ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் இரு​புற மும் நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்ள மேலும் 24 இந்​தி​யக் கொடி ஏந்​திய வணி​கக் கப்​பல்​களின் பாதுகாப்​பான பயணத்தை உறுதி செய்ய இந்​தியா பணி​யாற்றி வரு​கிறது. ஓமனில் இருந்து ஆப்​பிரிக்கா​வுக்கு பெட்​ரோல் ஏற்​றிச் செல்​லும் ஜக் பிர​காஷ் என்ற 4-வது இந்​தி​யக் கப்​பலும் ஹார்​முஸ் ஜலசந்​தி​யின் கிழக்​குப்பகு​தி​யில் இருந்து புறப்​பட்​டுள்​ள​தாக கப்பல் போக்​கு​வரத்து அமைச்​சகத்​தின் சிறப்​புச் செய​லா​ளர் ராஜேஷ் கு​மார்​ சின்​ஹா தெரிவித்​தார்​.

SCROLL FOR NEXT