இந்தியா

டி20 தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி

4-வது போட்டியில் மேற்கு இந்திய தீவுகளுடன் இன்று மோதல்

செய்திப்பிரிவு

ஹைதராபாத்: இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணி​கள் இடையி​லான 4-வது டி 20 போட்டி ஹைத​ரா​பாத்​தில் உள்ள ராஜீவ்​காந்தி சர்​வ​தேச மைதானத்​தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

இரு அணி​கள் இடையி​லான 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 தொடரில் இந்​திய அணி 2-1 என முன்​னிலை வகிக்​கிறது. முதல் போட்​டி​யில் இந்​திய அணி 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்​றிருந்​தது. 2-வது ஆட்​டத்​தில் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி 250 ரன்​கள் இலக்கை துரத்தி சாதனை படைத்​திருந்​தது. தொடர்ந்து 3-வது ஆட்​டத்​தில் மீண்டு வந்த இந்​திய அணி 14 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது.

இந்​நிலை​யில் 4-வது ஆட்​டம் இன்று இரவு ஹைத​ரா​பாத்​தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்​தில் நடை​பெறுகிறது. இந்த ஆட்​டத்​தில் வெற்றி பெறும் பட்​சத்​தில் இந்​திய அணி டி 20 தொடரை கைப்பற்றும். இதனால் இந்​திய அணி வீரர்​கள் கூடு​தல் முனைப்புடன் செயல்​படக்​கூடும். அதேவேளை​யில் இன்​றைய ஆட்​டத்​தில் தோல்வி அடைந்​தால் தொடரை இழக்க நேரிடும் என்ப​தால் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி கவனமுடன் செயல்பட முயற்​சிக்​கக்​கூடும்.

இருப்​பினும் ஆட்​டத்​தின் முடிவை, இரு அணி​களி​லும் உள்ள அதிரடி பேட்​டர்​களின் மட்டை வீச்சே மீண்​டும் தீர்​மானிக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. இந்​திய அணி​யின் பேட்​டிங்கை பொறுத்​தவரை​யில் டாப் ஆர்​டரில் அபிஷேக் சர்​மா, சஞ்சு சாம்​சன், இஷான் கிஷன் ஆகியோர் அதிரடி​யில் மிரட்​டக்​கூடிய​வர்​களாக திகழ்​கின்​றனர். இதனால் நடு​வரிசை பேட்​டர்​களுக்கு நெருக்​கடி ஏற்​படு​வ​தில்​லை.

எனினும் டாப் ஆர்​டர் பேட்ட்​ஸ்​மேன்​கள் சிறப்​பாக செயல்​ப​டாத பட்​சத்​தில், ஸ்ரேயஸ் ஐயர், திலக் வர்​மா, நிதிஷ் குமார் ரெட்​டி, நமன் திர் ஆகியோர் சவாலான சூழலைச் சமாளித்து உயர்​மட்ட செயல் திறனை வெளிப்​படுத்த வேண்​டி​யிருக்​கும். குறிப்​பாக, அதிக ரன்​கள் இலக்கை விரட்​டும் சூழலில் இவர்​களின் பங்​களிப்பு அணிக்கு மிக​வும் முக்​கிய​மான​தாக இருக்​கும்.

தரவரிசை​யில் பின்​தங்​கி​யிருந்​தா​லும், மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி இந்​தத் தொடரில் இந்​தி​யா​வுக்கு கடும் சவால் அளித்து வருகிறது. இருப்​பினும், நடப்பு உலக சாம்​பிய​னான இந்​திய அணியை அதன் சொந்த மண்​ணில் வீழ்த்த வேண்​டு​மா​னால், பேட்​டிங், பந்​து​வீச்​சு, ஃபீல்​டிங் என அனைத்து துறை​களி​லும் மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி இன்​னும் சிறப்​பான ஆட்டத்தை வெளிப்​படுத்தவேண்டும்.

அதேவேளை​யில், இந்​திய பந்​து​வீச்​சாளர்​களும் கட்​டுக்​கோப்​புடன் செயல்​படு​வது அவசி​யம். ஏனெனில், பெரிய அளவி​லான இலக்கை விரட்​டிப் பிடிக்​கும் திறன் தங்​களுக்கு இருப்​பதை மேற்கு இந்​தி​யத் தீவு​கள் பேட்​டிங் வரிசை ஏற்​கெனவே நிரூபித்துள்​ளது. இன்​றைய போட்டி நடை​பெறும் ஹைத​ரா​பாத் ராஜீவ் காந்தி சர்​வ​தேச மைதானம் பேட்​டிங்​குக்கு சாதக​மாகவே இருக்​கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஐபிஎல் தொடரில் இந்த சீசனில் இந்த மைதானத்​தில் 7 ஆட்​டங்​களில் முதலில் பேட் செய்த அணி​களின் சராசரி ஸ்கோர் 209 ரன்​களாக இருந்​தது. இதனால் இன்​றைய ஆட்​டம் ரசிகர்​களுக்கு விருந்​தாக அமையக்​கூடும்.

சன்​ரைசர்ஸ் ஹைத​ரா​பாத் அணி​யில் ஒன்​றாக விளை​யாடும் அபிஷேக் சர்​மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் தங்​களுக்​குப் பரிச்​சய​மான ஹைத​ரா​பாத் மைதானத்​தில் விளை​யாடு​வது கூடு​தல் சாதக​மாக இருக்​கும். ஹைத​ரா​பாத் மைதானத்​தில் இந்​திய அணி கடைசி​யாக 2024-ம் ஆண்டு வங்​கதேசத்​துக்கு எதி​ராக டி 20 ஆட்​டத்​தில் விளை​யாடியது.

அந்த ஆட்​டத்​தில் முதலில் பேட் செய்த இந்​திய அணி 6 விக்​கெட் இழப்​புக்கு 297 ரன்​கள் குவித்து சாதனை படைத்​தது. இமாலய இலக்கை துரத்​திய வங்​கதேச அணி​ 164 ரன்​களே சேர்த்​தது. இதனால் இந்​திய அணி133 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்றி கண்​டிருந்​தது. அந்த ஆட்​டத்​தில் சஞ்சு சாம்​சன் 47 பந்​துகளில் 111 ரன்​கள்​ விளாசி​னார்​. அவரிடம்​ இருந்​து மீண்​டும்​ ஒரு சிறந்​த மட்​டைவீச்​சு வெளிப்​படக்​கூடும்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT