வினய் மோகன் குவாத்​ரா | பிரமிளா ஜெயபால்

 
இந்தியா

எஸ்ஐஆர் நடவடிக்கையை விமர்சித்த அமெரிக்க எம்.பி. பிரமிளாவுக்கு இந்தியா கடும் கண்டனம்

செய்திப்பிரிவு

வாஷிங்டன்: இந்​தி​யா​வில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி (எஸ்ஐஆர்) நடவடிக்கையின்போது 13 கோடி வாக்​காளர்​களின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ள​தாகக் கூறி, அமெரிக்க ஜனநாயகக் கட்​சி எம்.பி. பிரமிளா ஜெயபால் நேற்​று​முன்​தினம் கவலை தெரிவித்​திருந்​தார்.

மேலும், இந்தியாவில் நடை​பெறும் போராட்​டங்​களுக்​கும் ஆதரவு தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், பிரமிளா ஜெய​பாலின் கருத்துக்​கு, இந்​தியா கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக, அமெரிக்கா​வுக்​கான இந்​தி​யத் தூதர் வினய் மோகன் குவாத்​ரா, தனது சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: இந்​தி​யா​வின் தேர்​தல் மற்​றும் அரசியல் நடை​முறை​கள் குறித்து பிரமிளா ஜெய​பால் வெளியிட்டுள்ள கருத்​துகள், இந்​தி​யா​வின் உள்​நாட்டு விவகாரங்களில் ஏற்​றுக்​கொள்ள முடி​யாத தலை​யீ​டாகும். இது கடும் கண்​டனத்​துக்​குரியது.

மேலும், இந்​தியா துடிப்​பான ஜனநாயக நாடு. வலு​வான, சுதந்திரமான அரசி​யலமைப்பு அமைப்​பு​களை​யும், சுதந்​திர​மான மற்​றும் நியாய​மான தேர்​தல்​களை நடத்​து​வ​தில் நீண்​ட​காலப் பாரம்​பரி​யத்​தை​யும் கொண்​டுள்​ளது. பிரமிளா ஜெய​பாலின் தவறான புரிதல்​களைப் போக்​கு​வதற்​காக அவருடன் ஆக்கப்பூர்வமான உரை​யாடலை மேற்​கொள்ள எப்​போதும் தயாராக இருக்கிறோம். இவ்வாறு இந்​தி​யத் தூதர்​ தெரி​வித்துள்ளார்​.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT