இந்தியா

கருப்பை வாய் புற்றுநோயை தடுக்க எச்பிவி தடுப்பூசி இயக்கம்: மத்திய அரசு திட்டம்

சல்மான்

புதுடெல்லி: கருப்பை வாய் புற்​று​நோயை தடுக்க நாடு தழு​விய எச்​பிவி தடுப்​பூசி இயக்​கத்தை தொடங்க மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

கருப்பை வாய் புற்​று​நோயைத் தடுக்​கும் ஒரு முக்​கிய முயற்​சி​யாக, 14 வயது மற்​றும் அதற்கு மேற்​பட்ட வயதுடைய சிறுமிகளுக்​கான நாடு தழு​விய ஹியூமன் பாப்​பிலோமா வைரஸ் (எச்​பி​வி) தடுப்​பூசி பிரச்​சா​ரத்தை மத்​திய அரசு விரை​வில் தொடங்க உள்​ளது. இதன்​படி கார்​டசில் தடுப்​பூசி இலவச​மாக வழங்​கப்​படும்.

          

இந்​தத் தன்​னார்​வத் திட்​டம் வரும் வாரங்​களில் நாடு முழு​வதும் செயல்​படுத்​தப்பட உள்​ளது. உயிருக்கு ஆபத்​தான இந்த நோய்க்​கான எதிர்ப்​புச் சக்​தியை அனை​வருக்​கும் சமமாக விரிவுபடுத்​து​வது, பெண்​களைப் பாதிக்​கும் பொது​வான புற்​று​நோய்​களில் ஒன்​றான இதற்கு எதி​ரான இந்​தி​யா​வின் போராட்​டத்தை வலுப்​படுத்​து​வது ஆகிய​வை​தான் இந்த திட்​டத்​தின் நோக்​கம்.

இந்​தத் திட்​டத்​தின் கீழ் வழங்​கப்​படும் நான்கு வகைப்​பாடு​களைக் கொண்ட எச்​பிவி தடுப்​பூசி, கருப்பை வாய் புற்​று​நோய்க்கு முக்​கிய காரண​மான எச்​பிவி வகைகள் 16 மற்​றும் 18, அத்​துடன் 6 மற்​றும் 11 ஆகிய வகை​களி​லிருந்​தும் பாது​காப்​பளிக்​கும் என்று அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

SCROLL FOR NEXT