பிரதமர் நரேந்திர மோடி

 
இந்தியா

சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு வழங்கும் இந்தியா: பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: சுற்​றுச்​சூழல் சார்ந்த பல்​வேறு பிரச்​சினை​களுக்கு மிகச் சிறந்த தீர்​வு​களை இந்​தியா வழங்​கு​கிறது என்று பிரதமர் நரேந்​திர மோடி தெரி​வித்​துள்​ளார்.

தேசிய பசுமைத் தீர்ப்​பா​யம் சார்​பில் நடத்​தப்​படும் சர்​வ​தேச சுற்​றுச்​சூழல் மாநாடு டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. இந்த மாநாட்டை பிரதமர் நரேந்​திர மோடி தொடங்​கி ​வைத்​தார்.

அப்​போது அவர் பேசி​ய​தாவது: வளரும் நாடு​களில் கரியமில வாயு உமிழ்வு சதவீதம் அதி​க​மாக இருக்​கிறது. இதைக் கட்​டுப்​படுத்த வேண்​டும் என்று வளர்ந்த நாடு​கள் கூறி வரு​கின்​றன. இந்​தக் குற்​றச்​சாட்டு முற்​றி​லும் தவறானது. இந்​தி​யா​வுடன் ஒப்​பிடும்​போது வளர்ந்த நாடு​களில் வெளி​யிடப்​படும் கரியமில வாயு உமிழ்வு சதவீதம் 6 மடங்கு அதி​க​மாக உள்​ளது. சர்​வ​தேச அரங்​கில் இந்த உண்​மையை புள்​ளி​விவர ஆதா​ரங்​களு​டன் நிரூபித்து வரு​கிறோம்.

கடந்த 2015-ம் ஆண்​டில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் சர்​வ​தேச சுற்​றுச்​சூழல் மாநாடு நடை​பெற்​றது. அப்​போது சுற்​றுச்​சூழலை பாது​காக்க 21 அம்ச திட்​டங்​களை நிறைவேற்ற உறுதி மேற்​கொள்​ளப்​பட்​டது. ஜி20 கூட்​டமைப்பு நாடு​களில் இந்​தியா மட்​டுமே இந்த 21 திட்​டங்​களை​யும் வெற்​றிகர​மாக நிறைவேற்றி உள்​ளது.

சுமார் 12 ஆண்​டு​களுக்கு முன்பு நாட்​டின் சூரிய மின் உற்​பத்தி 2 ஜிகா​வாட் ஆக இருந்​தது. தற்​போது 160 ஜிகா​வாட்​டாக உயர்ந்​துள்​ளது.

இந்​தி​யா​வின் சார்​பில் சர்​வ​தேச சோலார் கூட்​டமைப்பு தொடங்​கப்​பட்டு இருக்​கிறது. நாடு முழு​வதும் வீடு​களில் சூரிய மின்​சா​ரத்தை உற்​பத்தி செய்ய, “பிஎம் சூர்யா கர் முஃப்த் பிஜ்லி யோஜ​னா” திட்​டம் வெற்​றிகர​மாக செயல்​படுத்​தப்​படு​கிறது. மேலும் காற்​றாலை, அணு சக்தி சார்ந்த மின் உற்​பத்​தி​யும் கணிச​மாக அதி​கரிக்​கப்​பட்டு வரு​கிறது.

ரயில் போக்​கு​வரத்து முழு​மை​யாக மின்​மய​மாக்​கப்​பட்டு உள்​ளது. நாடு முழு​வதும் மின்​சார வாக​னங்​களின் எண்​ணிக்கை கணிச​மாக அதி​கரித்து வரு​கிறது. நீர்​வழிப் போக்​கு​வரத்​துக்கு முன்​னுரிமை அளிக்​கப்​படு​கிறது. நாட்​டின் முதல் ஹைட்​ரஜன் ரயில் சேவை அண்​மை​யில் தொடங்​கப்​பட்​டது. நாடு முழு​வதும் வனப் பகுதி படிப்​படி​யாக அதி​கரிக்​கப்​பட்டு வரு​கிறது. பல்​வேறு மாநிலங்​களில் புதி​தாக 70,000 குளங்​கள், ஏரி​கள் உரு​வாக்​கப்​பட்டு உள்​ளன. வேளாண் சாகுபடி​யில் சொட்டு நீர் பாசன திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படு​கின்​றன.

“அம்​மா​வின் பெயரில் ஒரு மரம் நடு​வோம்” இயக்​கத்​தின் மூலம் நாடு முழு​வதும் கோடிக்​கணக்​கான மரக்​கன்​றுகள் நடப்​பட்டு உள்​ளன. பிளாஸ்​டிக் கழி​வு​கள் மறுசுழற்சி செய்​யப்​படு​கின்​றன. மாட்​டுச் சாணம், காய்​கனி கழி​வு​கள் மூலம் எரி​வாயு உற்​பத்தி செய்​யப்​படு​கிறது. சுற்​றுச்​சூழல் பாது​காப்​பில் இந்​தியா அசா​தாரண முன்​னேற்​றம் அடைந்​திருக்​கிறது. தற்​போது சுற்​றுச்​சூழல் தொடர்​பான பல்​வேறு பிரச்​சினை​களுக்கு இந்​தியா மிகச் சிறந்த தீர்​வு​களை வழங்கி வரு​கிறது. இந்த பூமி நமது தாய். நாம் பூமித் தாயின் பிள்​ளை​கள். பூமித் தாயை காக்க வேண்​டியது நமது கடமை ஆகும். இவ்​வாறு பிரதமர் மோடி பேசி​னார்.

மாநாட்​டின் தொடக்க விழா​வில் உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், மத்​திய அமைச்​சர் பூபேந்​தர் யாதவ் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்​. இன்​றுடன்​ ​மா​நாடு நிறைவு பெறுகிறது. நிறைவு ​நாள்​ ​மா​நாட்​டில்​ குடியரசுத்​ தலை​வர்​ திர​வுபதி முர்​மு, மத்​தி​ய அமைச்​சர்​ மனோகர்​ லால்​ கட்​​டார்​ உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​க உள்​ளனர்​.

SCROLL FOR NEXT