இந்தியா

மேலும் 5 எஸ்-400 ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரஷ்​யா​விடம் இருந்து மேலும் ஐந்து எஸ்-400 ஏவுகணை​களை வாங்க இந்தியா திட்​ட​மிட்டு உள்​ளது. ரஷ்யாவின் எஸ் - 400 ஏவு​கணை​கள் உலகின் வலிமை​யான, அதிநவீன ஏவு​கணை​யாக கருதப்​படு​கிறது. கடந்த 2018-ம் ஆண்டில் ரஷ்​யா​விடம் இருந்து ரூ.51,838 கோடி​யில் ஐந்து எஸ் - 400 ஏவு​கணை​களை வாங்க இந்​தியா ஒப்​பந்​தம் செய்​தது.

இதன்​படி மூன்று ஏவு​கணை​களை ரஷ்யா விநி​யோகம் செய்துள்ளது. மீத​முள்ள இரு ஏவு​கணை வரும் நவம்​பரில் இந்தியாவிடம் ஒப்​படைக்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. ஆபரேஷன் சிந்​தூர் ராணுவ நடவடிக்​கை​யில் ரஷ்​யா​வின் எஸ் - 400 ஏவு​கணை​கள் மிக முக்​கிய பங்கு வகித்​தன.

இதைத் தொடர்ந்து ரூ.1 லட்​சம் கோடி மதிப்​பில் ரஷ்​யா​விடம் இருந்து மேலும் ஐந்து எஸ்​-400 ஏவு​கணை​களை வாங்க இந்​தியா திட்டமிட்டு உள்​ளது. இதுதொடர்​பாக மத்​திய பாது​காப்​புத் துறை சார்​பில் ரஷ்​யா​விடம் முறைப்​படி தகவல் தெரிவிக்​கப்​பட்​டது. இந்தி​யா​வின் விருப்​பத்தை தீவிர​மாக பரிசீலித்து வரு​வ​தாக ரஷ்ய அரசு தரப்​பில்​ பதில்​ அளிக்​கப்​பட்​டு உள்​ளது.

SCROLL FOR NEXT