இந்தியா

ஈரான் தலைவர் காமேனி மறைவுக்கு இந்தியா இரங்கல்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்​திய வெளி​யுறவுச் செய​லா​ளர் விக்​ரம் மிஸ்ரி நேற்று டெல்​லி​யில் உள்ள ஈரான் தூதரகத்​துக்கு சென்​றார். அங்கு ஈரான் தூதர் முகமது ஃபத்​தாலியை சந்​தித்து, ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமேனி மறைவுக்கு இந்​தி​யா​வின் அனு​தாபத்தை தெரி​வித்​தார்.

இந்​திய அரசு சார்​பில் இரங்​கல் புத்​தகத்​தில் கையெழுத்​திட்​டார். முகமது ஃபத்​தாலி​யுடன் விக்​ரம் மிஸ்ரி உரை​யாடிய புகைப்​படத்தை வெளி​யுறவு அமைச்​சகம் வெளி​யிட்​டுள்​ளது. ஈரான் விவகாரத்தில் மத்​திய அரசை எதிர்க்​கட்​சிகள் விமர்​சித்த நிலை​யில் விக்​ரம் மிஸ்ரி ஈரான் தூதரகம் சென்று இரங்​கல் தெரி​வித்​தது முக்​கி​யத்​து​வம் பெற்​றுள்​ளது.

          
SCROLL FOR NEXT