இந்தியா

2029-க்குள் ரூ.2 லட்சம் கோடி வர்த்தகம்: இந்தியா - இத்தாலி இலக்கு

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா மற்​றும் இத்தாலி இணைந்து அடுத்த 3 ஆண்​டு​களில் ரூ.2 லட்​சம் கோடி வர்த்​தகத்தை எட்ட இலக்கு நிர்ண​யித்​துள்​ளன. இத்​தாலி தலைநகர் ரோமில் நடை​பெற்ற 23-வது இந்தியா-இத்தாலி கூட்டு ஆணை​யக் கூட்​டத்​தில், மத்​திய வர்த்தக மற்​றும் தொழில் துறை அமைச்​சர் பியூஷ் கோயல் மற்றும் இத்தாலி துணைப் பிரதமரும் வெளி​யுறவு அமைச்சருமான அந்​தோனியோ தஜானி ஆகியோர் பங்​கேற்​றுப் பேச்​சு​வார்த்தை நடத்​தினர்.

ஐரோப்​பிய ஒன்​றி​யத்​தில் இந்​தி​யா​வின் நான்​காவது பெரிய வர்த்தகக் கூட்​டாளி​யாக இத்​தாலி உள்​ளது. 2025-ம் ஆண்​டில் ரூ.1.45 லட்​சம் கோடி​யாக இருந்த இருதரப்பு வர்த்​தகத்​தை, 2029 க்குள் ரூ.2 லட்​சம் கோடி​யாக உயர்த்த இரு நாடு​களும் உறு​தி​யேற்றுள்​ளன. வருங்​காலத்​தில் இதனை ரூ.5 லட்​சம் கோடி வரை உயர்த்​தும் வாய்ப்​புள்​ள​தாக​வும் அமைச்​சர் பியூஷ் கோயல் சுட்டிக்​காட்​டி​யுள்​ளார்.

இரு நாடு​களி​லும் உள்ள நிறு​வனங்​கள் எதிர்​கொள்​ளும் நிர்​வாக மற்​றும் நடை​முறைச் சிக்​கல்​களைத் தீர்க்​க​வும், முதலீடு​களை எளி​தாக்​க​வும் இந்​தியா மற்​றும் இத்​தாலி​யில் பிரத்​யேகப் பணிக்​குழுக்​களை அமைக்க ஒப்​புக்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. மேலும், மத்திய கிழக்கு வழி​யாக ரயில் மற்​றும் கடல்​வழிப் போக்​கு​வரத்து மூலம் இந்​தி​யச் சந்​தைகளை ஐரோப்​பாவுடன் இணைக்​கும் ‘இந்தியா - மத்​திய கிழக்கு - ஐரோப்பா பொருளா​தார வழித்​தடம்’ குறித்​தும் இக்​கூட்​டத்​தில் விரி​வாக விவா​திக்​கப்​பட்​டது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT