கொல்கத்தா: கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் மற்றும் யந்திரா இந்தியா நிறுவனங்களின் 5 விரிவாக்கத் திட்டங்களுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். கொல்கத்தாவில் நடைபெற்ற இவ்விழாவில் மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியும் உடன் இருந்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் ரூ.3,500 கோடி மதிப்பிலான 5 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உலகளாவிய கப்பல் கட்டும் மையமாக மாறுவதற்கு இந்தியா திறன் பெற்றுள்ளது. உலகளாவிய கப்பல் கட்டும் துறையில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டு வருகிறது, இந்த வாய்ப்பை இந்தியாவால் கைப்பற்ற முடியும், மேற்கு வங்கத்தில் கடந்த காலங்களில் தொழிற்சாலைகள் மூடப்படுவது மற்றும் வேலைநிறுத்தம் பற்றிய செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் இங்கு புதிய அரசு அமைந்த பிறகு புதிய திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.