மத்​திய வெளி​யுறவுத்​துறை இணை அமைச்​சர் கீர்த்தி வர்​தன் சிங்

 
இந்தியா

யாருடைய அழுத்தத்துக்கும் அடிபணிய மாட்டோம்: ரஷ்யா மீதான தடைகள் சட்டம் குறித்து இந்தியா கருத்து

செய்திப்பிரிவு

புதுடெல்லி: எந்​தவொரு நாட்​டின் அழுத்​தத்​தின் கீழும் நாங்​கள் செயல்பட மாட்​டோம் என்று ரஷ்யா மீதான அமெரிக்​கா​வின் பொருளா​தா​ரத் தடை சட்டம் குறித்து இந்​தியா கருத்து தெரி​வித்​துள்​ளது.

ரஷ்​யா​விலிருந்து கச்சா எண்​ணெயை இறக்​குமதி செய்​வதைத் தடுக்​கும் நோக்​கத்​துடன், இந்​தி​யா, சீனா போன்ற நாடு​களின் இறக்​குமதி பொருட்​கள் மீது 100 சதவீத வரி விதிக்க வகை செய்​யும் சட்​டத்தை அமெரிக்கா இயற்​றி​யுள்​ளது. இதனால் இந்​தி​யா​வுக்கு பாதிப்பு ஏற்​படும் என்று தெரி​கிறது.

இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத்​துறை இணை அமைச்​சர் கீர்த்தி வர்​தன் சிங் நேற்று கூறிய​தாவது:

மத்​திய அரசு இந்​திய நாட்டு மக்​களுக்கே முதலில் முன்​னுரிமை வழங்​கும். எங்​கள் மக்​களுக்​குப் பயனளிக்​கும் அனைத்து நடவடிக்​கைகளை​யும் நாங்​கள் மேற்​கொள்​வோம்.

மற்ற நாடு​கள் விதிக்​கும் கட்​டளை​களின் அடிப்​படை​யில் இந்​தியா முடிவு​களை எடுப்​ப​தில்​லை. நாட்​டின் வலிமை மற்​றும் ஸ்திரத்​தன்​மை​யைப் பாது​காப்​ப​தற்​கான நடவடிக்​கைகளை மத்​திய அரசு மேற்​கொள்​ளும்.

அமெரிக்க அரசால் விதிக்​கப்​படும் வரி​கள் நியாயமற்​றவை என்று நாங்​கள் தொடர்ந்து கூறி வரு​கிறோம். நாங்​கள் எந்​தவொரு நாட்​டின் அழுத்​தத்​துக்​கும் அடிபணிய மாட்டோம். வணிக ரீதி​யாக​வும் பொருளா​தார ரீதி​யாக​வும் சாத்​தி​ய​மான வாய்ப்​பு​கள் எங்கு கிடைக்​கிறதோ, அங்​கிருந்து இந்​தி​யா​வுக்கு தேவை​யான கச்சா எண்​ணெயைப் பெறு​வோம். இவ்​வாறு கீர்த்தி வர்​தன் சிங் தெரி​வித்​தார்.

SCROLL FOR NEXT