இந்தியா

எல்லைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா - சீனா சிறப்பு பிரதிநிதிகள் நாளை பேச்சு

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பெய்ஜிங் பயணம்

செய்திப்பிரிவு

புதுடெல்லி: இந்தியா - சீனா எல்​லைப் பிரச்​சினை தொடர்​பாக நாளை நடைபெறவுள்ள சிறப்​புப் பிர​தி​நி​தி​கள் பேச்சுவார்த்தையில் பங்​கேற்​ப​தற்​காக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று பெய்ஜிங் செல்​கிறார்.

இந்​தி​யா–சீனா இடையி​லான 3,488 கி.மீ. நீள எல்​லையை உள்ளடக்கிய சிக்​கலான எல்​லைப் பிரச்​சினைக்கு தீர்வு காண்பதற்​காக, இருதரப்பு சிறப்​புப் பிர​தி​நி​தி​கள் நிலை​யில் பேச்சு​வார்த்தை நடத்​து​வது என 2003-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்​டது. இதன்​படி அவ்​வப்​போது பேச்​சு​வார்த்தை நடைபெற்று வரு​கிறது.

அந்த வகை​யில், இந்​தியா சார்​பில், தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித் தோவலும், சீனா சார்​பில் அந்​நாட்​டின் வெளி​யுறவு அமைச்சர் வாங்​-​யீயும் சிறப்​புப் பிர​தி​நி​தி​களாக நியமிக்கப்பட்டுள்​ளனர்.

இந்​நிலை​யில், எல்​லைப் பிரச்​சினை தொடர்​பான சிறப்​புப் பிர​தி​நி​தி​கள் பேச்​சு​வார்த்​தை​யில் பங்​கேற்​ப​தற்​காக, தேசிய பாதுகாப்பு ஆலோ​சகர் அஜித் தோவல், இன்று சீனா செல்​கிறார். சீனா​வின் சிறப்​புப் பிர​தி​நிதி வாங்​-​யீயுடன், அஜித் தோவல் நாளை 25-வது சுற்று பேச்​சு​வார்த்​தையை நடத்த உள்​ளார்.

எல்​லைப் பிரச்​சினைக்கு இது​வரை தீர்வு காண முடிய​வில்லை என்றாலும், இரு நாடு​களுக்​கும் இடையே அவ்​வப்​போது ஏற்​படும் பல்​வேறு பதற்​றங்​களைச் சமாளிக்க இந்​தப் பேச்​சு​வார்த்தை பயனுள்​ள​தாக இருக்​கும் என இருதரப்பு அதி​காரி​களும் கருதுகின்றனர்.

வரும் செப்​.12, 13 ஆகிய தேதி​களில் டெல்​லி​யில் நடை​பெறவுள்ள ‘பிரிக்​ஸ்’ உச்சி மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்​கேற்​பார் என எதிர்​பார்க்​கப்​படும் நிலை​யில், அதற்கு முன்​ன​தாக நடை​பெறும் இந்​தப் பேச்​சு​வார்த்தை முக்​கி​யத்​து​வம் பெற்​றுள்​ளது. கடைசி​யாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தியான்​ஜினில் நடைபெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்பு உச்சி மா​நாட்​டின் இடையே இரு தலை​வர்​களும் சந்​தித்​துப் பேசினர் என்​பது குறிப்பிடத்​தக்​கது.

SCROLL FOR NEXT